ஆதி சங்கராச்சாரியார்
ஸ்ரீ குருப்யோ நம : |
பரமேஷ்வரன் தான் ப்ரஹ்மஸ்வரூபம் என்று தெரிந்துவிடவோ தெரியப்படுத்தவோ கூடாது என்று ஸங்கல்பித்து காலடி எனும் புண்யக்ஷேத்ரத்தில் சங்கரராக அவதரித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு முறை ஆதிசங்கரர் கைலாசத்திற்கு சென்றார் சென்று பார்வதி பரமேஷ்வரனை தர்ஷணம் செய்தார்.அப்பொழுது பரமேஷ்வரன் இரண்டு ஓலைச்சுவடிகளை தந்தருளினார் .திரும்பி செல்லும் பொழுது நந்தியெம் பெருமான் ஒரு ஓலைச்சுவடியை பிடுங்கிக்கொள்கிறார். தன்னிடம் இருந்த பகுதியை படித்து பார்த்தல் ஆதி முடிவற்று இருக்கவே,நந்தி பிடுங்கி கொண்ட பகுதியை பரமேஷ்வரஸ்வரூபமான தானே இயற்றினார்.
அதுவே ஸௌந்தர்யலஹரீ
