அபராஜிதா(PART-1)
ஸ்வர்ணபுரீ என்ற ராஜ்யத்தை பவ்யன் என்ற அரசன் ஆண்டு
வந்தான்.இயற்கை எழில் சூழ்ந்த மிக அழகிய ராஜ்யம் ஸ்வர்ணபுரீ.
ஆனால் அரசனோ மிகுந்த கோபம்கொண்டவன். பார்ப்பதற்கு
நல்லவன் போன்று காட்சி அளித்தாலும் மகா மூர்க்கனாக இருந்தான். இவன் பைத்தியக்காரன்
என்றே மக்களின் எண்ணம். அது போன்றுதான் அவன் செயலும் இருந்தது. அவனிடம் இருக்கும் துர்குணங்கள் விசித்திரமானவை. தான் கனவில் கண்டதை
நிஜத்தில் செய்து பார்த்துவிடுவான். இப்படித்தான் ஒருமுறை தனது தேரோட்டியை யானை
மிதித்து கொல்வது போன்று கனவு கண்ட அவன் நிஜத்தில் அதை மக்களின் முன்பு செய்து காட்டினான்
. மக்களும் பீதியிலேயே இருந்தனர் அரசனுக்கு என்ன கனவு வருமோ யாருக்கு என்ன நேருமோ
என்று...
இப்படியே காலங்கள் சென்றன.ஒருமுறை அரசனுக்கு
கனவு வந்தது அந்த கனவில் அவன் ஓர் அரச சபையை கண்டான். சபைக்கு நடுவே அவனே அமர்ந்திருந்தான்.
அவனது ஸிம்ஹாஸனத்திற்கு கீழே இரண்டு அறைகள்.சபைக்கு நடுவே ஒருவனை கொண்டு வந்து நிறுத்த
அவன் தனது வலது கரத்தை தூக்கி சைகை காண்பிக்க, ஸிம்ஹாஸனத்திற்கு கீழே இரண்டு அறைகளில்
இருந்து வலது அறையின் கதவு திறந்து ஓர் புலி வந்து அவனை விழுங்கியது.இதை நிஜத்தில்
செய்ய விரும்பிய அரசன், மந்திரியை அழைத்து கனவை பற்றி சொல்ல மட மந்திரி: சற்றே தூபம்
காட்டினான்.
அரசே இதை இப்படியே செய்து விட்டால் ஒரே முறைதான்
மகிழ்ச்சி கிட்டும். ஆனால் இதை நிரந்தரமாக்கி விட்டால் என்ற மந்திரி சொல்ல, அரசனுக்கு
ஆர்வம், எப்படி என்று கேட்டான்? மன்னா இரு அறைகள் ஒன்றில் பசியுடன் கூடிய புலி மற்றொன்றில்
அழகிய மணப்பெண்.நமது ராஜ்யத்தில் யார் தவறு செயகிறானோ அவன் செய்யும் குற்றத்திற்கான
தண்டனை அவனே தேடி கொள்ளட்டும் என்றான் மந்திரி. அரசனுக்கு பித்தம் தலைக்கேறியது. உடனே
அதை நிறைவேற்றினான் மக்கள் அவதிக்கு பஞ்சமே இல்லை ராஜயத்தின் மக்கள் நடை பிணமாக வாழ்ந்தனர்.
இப்படியே சென்றது.
அரசனுக்கு ஓர் அழகிய மகள். அபராஜிதா என்று
பெயர். மகளுக்கு திருமணம் செய்ய நினைத்தவன் சுற்றி இருந்த அனைத்து ராஜ்யங்களிலும்
ராஜகுமாரர்களை தேடினான். ஆனால் அபராஜிதா தனது ராஜயத்திலே இருந்த ஒரு சாதாரண ஓவியனை
விரும்பினாள். ஒற்றர்கள் மூலம் அரசனின் காதுகளுக்கு எட்டியது. சபை கூடியது. ஓவியன்
கைது செய்யப்பட்டான். மந்திரியின் ஆலோசனை படி அரசனால் நியமிக்கப்பட்ட சபையிலே அந்த
ஓவியனுக்கான தண்டனையை அவனே தேடி கொள்வான் என்றே தேதியை சொன்னார்கள்.
பசிமிகுந்த புலி பிடித்துவநதனர். மணப்பெண்ணும் அழைத்து வரப்பட்டாள். அபராஜிதா
தனது காதலனை காப்பாற்ற, எப்படியோ எந்த அறையில் யார் இருப்பார்கள் என்று தெரிந்து கொண்டவள்,
தண்டனை நிறைவேற்றபடும் முதல் நாள் சிறையிலே இருக்கும் தனது காதலனை காண சென்றாள்.அவள்
சொன்னது இவ்வளவு தான் . நான் வலதுபுறம் சைகை காண்பிப்பேன், என்றும் நீங்கள் வலதுகையை
சைகை காண்ப்பியுங்கள் என்றும் சொல்லிவிட்டு சென்றாள். பொழுது விடிந்தது, சபை கூடியது,
ஓவியன் அழைத்து வரப்பட்டான். சபைக்கு நடுவே ஓவியன். சிம்ஹாசனத்தில் அரசன்.மக்கள் அனைவரும்
கூடினர். மந்திரி ஒருபுறம். மற்றொருபுறம் அபராஜிதா. அரசன் ஆணையிட்டான். ஓவியன் அபராஜிதாவை
கண்டான், ஆனால் அபராஜிதா......
ஒரு சின்ன கேள்வி ? அபராஜிதா
என்ன செய்திருப்பாள் சைகை செய்தாளா இல்லையா? சிறைக்கு சென்று தன் காதலனை கண்டு நான்
வலதுபுறம் சைகை காண்பிப்பேன் நீங்கள் வலதுகையை சைகை காண்ப்பியுங்கள், என்று விவரங்கள்
சொல்லியும், வலதுபுரம் என்று தெரிந்தும் ஓவியன் அபராஜிதாவை எதற்காக கண்டான்?
அபராஜிதா சற்றே எதிர்பாராவிதமாய் வலது கையை உயர்த்தாமல் இடதுகையை உயர்த்தி சைகை
செய்தாள். ஓவியவனும் செய்வதறியாமல் இடது கையை உயர்த்தினான்
அரசசபை முழுவதும் அமைதி . அனைவரின் கவனமும் அரசனின் சிம்ஹாசனத்திற்கு
கீழே இருக்கும் அறைகளில். ஓவியன் உடம்பில் ரத்தஓட்டம் நின்றது. கண்கள் சிவக்க தந்த்ரமான
சிரிப்புடன் மந்திரி .
க்ஷண நேரத்தில் இடது
அறையிலிருந்து வெளிவந்தது யார்? “மணப்பெண்” வில்லத்தனமான சிரித்தான் அரசன். புலியானாலும் சரி மணப்பெண் ஆனாலும் ஓவியன் அபராஜிதாவிற்கு
இல்லை என்று த்ருடமான தீர்மானம் மந்திரிக்கு. ஓவியன்
உயிர் பிழைத்தான் என்று மக்கள், அபராஜிதாவின் நிலை என்ன ? மந்திரியின் கவனம் அபராஜிதாவின்
மேல்.கம்பீர இளவரசியான அபராஜிதாவின் கண்களில் ஓரம் கண்ணீர். ஓவியன்: வலது புறமாக இருந்தால்
வெறும் உயிர்தான் போயிருக்கும் என்று துச்சமாக எண்ணினான். ஓவியன் திருமணம் நிறைவேற
அரசசபை கலைந்தது. மறுநாள் சூர்ய உதயத்திற்கு அரசன் உயிருடன் இல்லை. கர்மவினை.
அரியணையில் மந்திரி.
அடிமையான அபராஜிதா.
தகுதியற்றவர்களை
முழுவதுமாக நம்புவது தவறு. தகுதியற்றவர்கள்(ளை) அரியணையில் அமர்வதும் அமர்த்துவதும்
தவறு. நடந்தால் இதுதான் கதி
No comments:
Post a Comment