Sunday, October 17, 2021

 APARAJITHA-PART-2

அனைத்தும் தோல்வியுற்ற பின்  கடவுள் என்பது பெரிதாக ஒன்றும் இல்லை என்ற மனோநிலையில் இருந்தாள் அபராஜிதாவின் நெருங்கிய தோழியான சாருஸ்மிதா. சாருஸ்மிதாவை பற்றி சொல்லவேண்டும் என்றால் தான் ஒரு பணிப்பெண் மட்டுமே இளவரசியின் தோழியாக தன்னுடைய அந்தஸ்தை உபயோகித்தவள் அல்ல சாருஸ்மிதா. ஆனால் இளவரசிக்கு இவளை கண்டால் சற்றே பொறாமை உண்டு ஏனென்றால் தனக்கு சமமான அழகி ராஜ்யத்திலேயே அவள் மட்டும்தான்.இவை ஒரு புறம் இருக்க தனது தோழியான இளவரசிக்கு நேர்ந்ததை நினைத்து கவலை கொண்டாள் சாரு ஸ்மிதா .ஆனால் அபராஜிதாவுக்கோ அகத்திலோ புறத்திலோ எந்த கவலையும் இருப்பதாக தெரியவில்லை. ஏன் தான் இளவரசி என்பதாலோ ?

          ஸ்வர்ணபுரிக்கு மிக அருகாமையில் உள்ள ராஜ்யங்களில் ஒன்று ஷஹஜீந்தபுரம் அரசன் சிம்ஹேந்த்ரனின் பார்வைக்கு கட்டுப்பட்டு செழிப்புடன் திகழும் ராஜ்யமிது தன் ராஜ்ஜியத்தில் இருக்கக்கூடிய அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து சத்யம் தவறாது ஆட்சி புரியும் அரசன் சிம்ஹேந்த்ரன். ஸ்வர்ணபுரியின் அரசன் பவ்யன் இறந்ததை கேள்விப்பட்டு நோவதை தவிர என்னதான் செய்ய முடியும். பவ்யன் தர்மம் மார்கத்தை கடைபிடித்தவனே.ராஜ்ஜியத்தின் அரசன் சரியாக இருந்தால் போதுமா. மந்திரியும் முக்கியமாயிற்றே.

                           ஸ்வர்ணபுரியின் மந்திரி வராளபிரம்மன். சதி செய்து அரசனையும் வீழ்த்தி  தான் சிம்ஹாசனத்தில் அமர்ந்து ,போதும் போதும் ஸ்வர்ணபுரிக்கு வந்த சோதனை. தகுதியற்ற ஒருவனை எப்படி தலைவனாக ஏற்க முடியும் ? ஸ்வர்ணபுரியின் மக்கள் எங்கு எல்லை கடந்து வேற்று ராஜ்யத்திற்கு சென்று விடுவார்கள் என்று ராஜ்ஜியத்தின் எல்லையில் காவல் வைத்தான் வராளபிரம்மன்.

 

 

 

ஷஹஜீந்த்ரபுரத்து அரசன் சிம்ஹேந்த்ரன்  ஸூக்ஷ்ம புத்தி கொண்டவன்.அரசன் பவ்யன் தர்மத்தை கடைபிடித்து ஆட்சி செய்தவன்தான் ஆனால் அபராஜிதா ஜனித்த க்ஷணமே அரசியாரும்  பவ்யனின் பட்டமஹிஷி மனோரசிகா தேவி இறந்த பின்பு பவ்யனின் போக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டது மந்திரியின் சதியால் பவ்யன் பவ்யமற்று போனதையும் நன்கு அறிந்தவன் அரசன் சிம்ஹேந்த்ரன்,மேலும் பவ்யனின் பட்டமஹிஷி மனோரசிகா தேவி  தனது குருவும் ஷஹாஜிராஜ்யத்தின் தன்னிகரற்ற அரசனுமான ஸ்ரீ ஸ்ரீ ஸாரஸ மஹாமஹேந்திரனின் தேளஹித்ரியும் ஆவார்  அதனால்தான் ஸ்வர்ணபுரியை காப்பாற்றும் பொறுப்பு தன்னிடம் இருப்பதாக உணர்ந்தார் சிம்ஹேந்த்ரன் ……………………

அரசன் சிமஹேந்த்ரன் சுப்பராயரிடம் சீட்டிகை கொடுத்து தூது அனுப்பினார் சுப்பராயன் ஒன்றும் மனிதன் அல்ல. ஸ்வர்ணபுரீ ராஜ்யத்தில் ஜலாண்டஜ மண்டலீ கார்கோடக தக்ஷக குளிக பத்ம மஹாபத்ம ஷங்கபல காளிங்காதிகள் போன்ற 26  சர்பவகைகள் சுற்றி திரிவது உண்டு ஆதலால் கொம்பேறிமூக்கன் என்ற ஓர் சர்பத்திடம் தூது அனுப்பினார் அந்த சர்பத்தை அரசர் சுப்பராயா  என்ற அழைப்பது வழக்கம்.

சரியாக சிம்ஹ மாச சதுர்தஷி திதி, இரவு மெல்லிய குளிர்ந்த காற்று, இரு  சந்த்ரகாந்தங்கள் மின்னல் போன்று அழகாக ஜொலித்தது .ஒன்று சாருஸ்மிதா ,மற்றொன்று  அபராஜிதா, சிவந்த கண்களுடன் நோக்கினான் சுப்பராயன் அல்ல   மந்திரி  வராளப்ரம்மன். அபராஜிதாவை பார்த்தனன் இப்பொழுது சூழ்நிலைகள் அவனுக்கு எதிராகவே இருந்தன வேறென்ன செய்யமுடியும் திரும்பிச்சென்றுவிட்டான்.

சுப்பராயன் மெதுவாக உள் நுழைந்து சாருஸ்மிதாவை நெருங்கினான் சாருஸ்மிதா கண்கள் விழித்து பார்த்த பொது பயத்தில் கூச்சலிட வாயை திறந்தாள் அவளது வாயை வேகமாக தனது கைகளால் மூடினாள் அபராஜிதா.உறங்குவது போல் நடித்தே ஆகவேண்டியா கட்டாயம் இருவருக்கும். அபராஜிதா ஒரு மான்குட்டியை பிடிப்பது போல் பிடித்து  அதன் வாயிலிருக்கும் சீட்டிகையை எடுத்து கீழே விட்ட க்ஷண நேரத்தில் மறைந்தான் சுப்பராயன் ஏனென்றால் சுப்பராயன் போன்ற கொம்பேறிமூக்கினத்தை சேர்ந்த சர்ப்பங்கள் துள்ளுவதும் மரத்தில் ஏறுவதும் வழக்கம்தான் .அபராஜிதா சீட்டிகையை எடுத்து பார்த்தபோது அதில் குறிப்பு இருந்தது

“ஜித பாரிஜாத வர பாரிஷிக பௌர்ணமி சிஹசிஹா”

                என்று எழுதப்பட்டிருந்தது. ஆம் அரசர்கள் தூது விடுவதற்கு உபயோகப்படுத்திய மொழி  ப்ராஹ்மி மொழி.பார்த்தவுடன் புரிந்துகொண்டாள் அபராஜிதா. ஜிதபாரிஜாத (அபராஜிதா) பாரிஷிக ( பாரிஷிக நதிக்கரையில்) வர  (வராங்கதன் மண்டபத்தில் ) பெளர்ணமி நாளன்று சிஹசிஹா (வருகவே) என்று அதன் பொருள். எப்படியும் அரசன் சிமஹேந்த்ரனை காண செல்ல வேண்டும் எப்படி ........தனது தோழி சாருஸ்மிதாவை  கண்டாள் அபராஜிதா தோழிகள் என்றாலே இப்படித்தான் எதிலாவது  சிக்கித்தானே ஆகவேண்டும்.அவ்வளவுதான்  இளவரசியின் உடையில் சாருஸ்மிதா  அபராஜித சாதாரண பணிப்பெண் வேடத்தில் வெளியே சென்றாள்

பெளர்ணமி நாளன்று வராங்கதன் மண்டபத்தின் தென்கரையில் சிம்ஹேந்த்ரன் அபராஜிதா தனது மகள் வயதே நிரம்பிய அபராஜிதாவை கண்டு கண்கலங்கினான்.

கலங்குவதற்கு நேரமல்ல அரசே அபராஜிதாவின் குரல்

 நீ சற்று நிதானமாக யோசித்திருந்தால் உன் காதல் திருமணம் இனிதே நடந்திருக்கும் சிம்ஹேந்த்ரனின் குரல் 

அபராஜிதாவின் பதில் அரசனை திகைக்க செய்தது. என் காதல் திருமணம் இனிதே நிறைவேறும் அரசே அரசன் விக்கித்து போனான்

 எப்படி சாத்தியம் அரசன் மனதில் நினைத்து பேச துவங்கும் முன்னரே

மேலும் அபராஜிதாவின் குரல் நாட்டை காப்பற்ற செய்வன உடனடியாக செய்யுங்கள் அரசே. ஓர் இளவரசியாக தனக்கு பொறுப்புகள் இருப்பதை உணர்ந்தாள் அபராஜிதா.அரசன் சிம்ஹேந்த்ரனும் அபராஜிதாவும் திறமையாக திட்டம் தீட்டினர்.

இவர்கள் பேசுகையில் க்ஷணநேரம்தான் அம்பு மழை பொழிய தொடங்கியது. அபராஜிதா ராஜ்யத்தை காப்பாற்ற தான் வைத்திருக்கும் அந்திம பிரம்மாஸ்திரம் அரசன் சிம்ஹேந்த்ரன் மட்டுமே ......அம்புகள் நுனியில் விஷம் பூசியிருப்பதை இருவரும் உணர்ந்தனர் தப்பிக்கும் முயற்சியில் சிம்ஹேந்த்ரன் சாரதியயை நோக்கினான்  சாரதியின் உச்சந்தலையில் அம்பு தைக்கப்பட்டு அங்கேயே  உயிர் பிரிந்தே இருந்தது கண்ணிமைக்கும் நேரத்தில் அபராஜிதாவின் வலது தோளில் அம்பு தைத்தது மேலும் சிம்ஹேந்த்ரனுக்கு……….. தொடரும் 

 

No comments:

Post a Comment

  அபராஜிதா-part-6 அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக...