இயற்கை எழில் சூழ்ந்த ஓர் அழகான ராஜ்ஜியம் அந்த ராஜ்யத்தை த்ரிமூர்த்த சக்கரவர்த்தி என்பவர் ஆட்சி புரிந்து வந்தார் அவர் தேஷாந்த்ரம் செல்ல முடிவு செய்து தான் கண்மூடித்தனமாக நம்பிய ஒருவனிடம் ராஜ்ய பொறுப்பை ஒப்படைத்து சென்றார். அவனது பெயர் ராஜாதி ராஜ மஹா மூட பகதூர் ஆட்சி பொறுப்பு தன் கைக்கு வந்த உடன் தன் இஷ்டத்திற்கு ஆடொஆடென்று ஆடினான். அவனுக்கு கீழ் ஓர்
பணிப்பெண். சதா சர்வ காலமும் ஜால்ரா போட்டு கொண்டே
இருப்பாள். முட்டாள் அரசன் பீமன் மரத்தை பிடிங்கினான்
என்று சொன்னால் இவளும் உடனே டிங்கினான் டிங்கினான்
டிங்கினான் என்று சொல்வாள். இவளது ஜால்ராவுக்கு அளவே
கிடையாது ராஜாதி ராஜ மஹாமூட பகதூர் நல்லவன் போன்று
நடிப்பதிலும் புத்திசாலியாக முட்டாள்தனங்கள் செய்வதிலும் வல்லவன். வரி மீது வரி போட்டு ஜனங்களை வாட்டினான்.
தான் ஒரு முட்டாள் என்பதை அரசன் நொடிக்கு ஒரு முறை
காட்டினான். இப்படி இருக்க இவனது ராஜ்ஜியத்தில் முருகன்
என்று கொல்லன் இருந்தான் கில்லாடி விஷயங்கள் தெரிந்த
கொல்லன் இவன் பல தரமான பொருட்களை செய்து
மக்களுக்கு உபயோகத்திற்கென கொடுத்து அவர்கள்
வேலையை எளிமையாக்கி நற்பெயர் பெற்றான்
அரசனுக்கு திடீரென்று ஓர் ஆசை அவனிடம் மிக நீளமும்
அகலமும் கொண்ட ஓர் இரும்பு கோல் ஒன்று இருந்தது. அதை
உருக்கி நல்லதோர் இரும்பு மனிதனை தயாரிக்க வேண்டும்
என்று அரசன் முருகனை பற்றி கேள்வி பட்டு அவனை
அழைத்து வர காவலாளிகளை அனுப்பி வைத்தான். பாவம்
முருகன் ராஜாதி ராஜ மஹாமூட பகதூர் பற்றி முழுவதும்
தெரியாமல் சென்று அரசனை கண்டான். பணிகிறேன் அரசே !
என்றான் முருகன் உன் பணிவு எனக்கு தேவை இல்லை. நான்
சொல்லும் கார்யத்தை நீ முடித்து தர வேண்டும். இல்லா
விட்டால் உன் தலை கொய்யபட்டு கழுகுகளுக்கு தீனியாக
அளிக்கப்படும். சரியா? என்றான் அரசன். முருகன் வேறு
வழியில்லாமல் ஒப்புக்கொண்டான். அரசன் மேலும்
சொன்னான். இந்த இரும்பை பார், இதை உருக்கி ஓர் இரும்பு
மனிதனை தயார் செய்து தா என்றான் அரசன். முருகனோ
இவ்வளவுதானா அரசே! எளிதில் முடிக்கிறேன் என்றான்
முருகன் யோசிக்காமல்.
அரசன் சொன்னான்… முருகா நன்றாக கவனி இரும்பு
மனிதனை தயார் செய்ய வேண்டும் என்றான். சரி ஆகட்டும்
அரசே !அப்படியே செய்துவிடுகிறேன் என்றான். இங்கே பார்
முருகா நீ தாயார் செய்யும் இரும்பு மனிதன், மனிதனை
போன்று ஓர் உயிருள்ள்ளதாகவே இருக்க வேண்டும். புரிந்ததா
என்றான் பகதூர்! முருகன் திகைத்து நின்றான். அரசே……
என்று இழுத்தான் முருகன். முருகா ஒப்பு கொண்டு விட்டாய்
வேலை முடிக்க பட வேண்டும். இல்லையேல் ஜாக்கிரதை
என்று சொல்லி அனுப்பினான் மன்னன் முருகனுக்கு இரவு
முழுவதும் ஒரு பொட்டுக்கூட தூக்கம் வரவில்லை இதிலிருந்து
எப்படி தப்பிப்பது என்றும் புரியவில்லை மிகுந்த வருத்தத்தோடு
இருந்தவன் தனது தாத்தாவிடம் பேசினால் தீர்வு கிடக்கும்
என்று நினைத்து
தனது தாத்தாவிடம்
இதற்கான தீர்வை கேட்டான். முருகா இப்படி
மாட்டிக்கொண்டுவிட்டாயே. சரி உனக்கு யோசனை
சொல்கிறேன் கேள். மன்னன் தயாரிக்க சொன்னது மனிதன்
என்பதால் அதிசய பொருட்கள் சிலவற்றை கேள் அதை தந்த
உடன் நான் வேலையை துவங்குகிறேன்
என்று சொல்.
மறுநாள் அரசனை காண சென்றான் முருகன் அரசே எனக்கு
நீங்கள் சொன்ன வேலையை முடிக்க ஒரு சில பொருட்கள்
தேவை என்றான். அதென்ன பொருட்கள் சொல் தருகிறேன்
என்றான். அரசன் இரும்பினை உருக்கிய உடன் அதனை
குளிர்விக்க தண்ணீர் வேண்டும் நீங்கள் உயிரும் உணர்வும்
உள்ள ஓர் சிலையை கேட்டதால் இரும்பின் எடைக்கு
நிகராக கண்ணீரால் நிரம்பிய பானைகள் வேண்டும், மேலும்
அந்த மனிதனுக்கு தலையில் முடியினை வைக்க இரும்பு
எடைக்கு நிகராக முடிகள் வேண்டும், அவனுக்கு உடுப்புகள்
தைக்க இரும்பின் எடைக்கு நான்கின் ஒரு பகுதி எடைக்கு
பருத்தி வேண்டும் அரசே .
முடித்து தர படும் என்றான்
அரசன்.
அவ்வள்வுதான் மறுநாள் ஜால்ரா கோஷ்டி ஊர் முழுக்க
தண்டோரா போட்டது. நாட்டில் உள்ள பருத்தி அனைத்தும்
கொண்டு வருமாறு உத்தரவு போட்டான், நாட்டில் உள்ள
ஆண்கள் அனைவரும் மொட்டையடித்து தங்கள் முடியினை
அரசாங்கத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டான், வீட்டிற்கு ஒரு
பானை தரப்படும் தங்கள் வீட்டில் உள்ள நபர்கள் அழுது
கண்ணீரால் இந்த பானையை ஒரு வார காலத்திற்குள் நிரப்ப
வேண்டும், என்று உத்தரவு போட்டான்.
இதென்ன பைத்தியக்காரத்தனமான உத்தரவு இப்படி
புத்தியில்லாத அரசனுக்கு கீழே பாவம் அப்பாவி மக்கள் என்ன
செய்ய முடியும் .அழுது பானையை நிரப்ப முயன்றார்கள்.
கால்வாசிகூட நிரம்பவில்லை. அப்படி கொஞ்சம் நிரம்பினால்
நீராவியாகி பானை காலியாகி இருந்தது மன்னனின் முட்டாள்
தனமான கட்டளைகளால் நாட்டில் குழப்பமே மிஞ்சியது.
இப்படி இருக்க தேஷாந்த்ரம் சென்ற சக்ரவர்த்தி நாடு
திரும்பினார். தன் மக்களின் நிலையை கண்டு வருந்தி
அவனுக்கும் அந்த ஜால்ராவுக்கும் தக்க தண்டனை
அளித்தார்.
சகோதர சகோதரிகளே!
நான் என்ன சொல்வது உங்களுக்கே புரிந்திருக்கும்
மீண்டும் ஓர் கற்பனை கதையில் சந்திப்போம்
நன்றி வணக்கம்
No comments:
Post a Comment