மாலை சரியாக 5.30 மணி, சீராளா ரயில் நிலையம்.ரயிலை விட்டு இறங்கி வெளியில் வந்து இன்குல்லு எனும் ஊருக்கு செல்ல பேருந்திருக்காக காத்திருந்தான் ராஜபாதூர் -பெயர் மட்டுமே கம்பீரமானது. ஆனால் அவன் பார்பதற்கு உடைந்து விழுவது போல் இருப்பான்.யாராவது சற்று குரலை உயர்த்தி அழைத்தால் பயந்துவிடுவான்.எதிர்பார்த்த நேரத்திற்கு பேருந்து வந்தது. பேருந்து இவனை விட சற்று மோசமாகவே இருந்தது.நடத்துனர் கீழே இறங்கி சோமவேலி, கொங்குபில்லா,நாநவிலா,இன்குல்லு, என்றார்.ராஜபாதூர் பேருந்தில் ஏறி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து அமர்ந்தான்.நடத்துனர் மெதுவாக பேருந்தில் ஏறி எத்தனை தலைகள் என்று பார்த்து கொண்டார்.மொத்தமாக 15 பேர் இருந்தாரக்ள்.
மாலை இருள் சூழும் வேலை .சரி போலாம் என்று போகலாம் என்று தோன்றவே பண்டி வெள்ளொச்சு என்றார் நடத்துனர் ஓட்டுனரும் சரி என்று வண்டியை எடுத்து நகர்த்தி சென்றார்.ஒவ்வொருவராக பயணசீட்டு வாங்கினார்கள் .இவன் இடத்திற்கு நடத்துனர் வந்த உடன் இன்குல்லு என்றான் ராஜ்பாதுர் நடத்துனர் இவனை மேலும் கீழும் பார்த்தார் இவனுக்கு சற்றே நடுங்கியது, பயணசீட்டு தரும் முன்பு இன்குல்லுதாக பண்டி வெள்ளது ( இன்குல்லு வரை வண்டி செல்லாது ) (நுவ்வு திகி நடிசி வெள்ளாலி …எமண்டாவு )நீ இறங்கி சற்று நடந்து செல்ல வேண்டும் என்ன சொல்கிறாய் என்றார் நடத்துனர். இவனுக்கு தெலுகு பாஷை பேசவராதே தவிர புரிந்துகொள்வான்.சரி என்று தலையை அசைத்தான்.பயணசீட்டு அளித்த பின்னர் அவனை ஒருமுறை மேலும் கீழும் பார்த்தார் நடத்துனர்.பின்பு இவன் கவனித்தான் இவன் அந்த கிராமத்தின் பெயர் சொன்ன பின்பு பேருந்தில் உள்ள அனைவரும் இவனையே பார்த்தனர். ஏற்கனவே நாம்தான் பெரிய தைர்யசாலி ஆயிற்றே.இதற்கு பின் கேட்க வேண்டுமா ?
ஒவ்வொரு ஊராக கடந்து சென்றது மெல்ல இருள் சூழ்ந்தது.மெதுவாக நாநவிலா வந்தது .நடத்துனர் ராஜ்பாதுர் அருகில் வந்து (நீ ஊரு வஸ்துன்னதி சிதம்கா உண்டு) .உன் ஊர் வருகிறது தயாராக இருக்கவும் என்று சொல்லிவிட்டு அவனை ஒருமுறை மேலும்கீழும் பார்த்து சென்றார் இவனுக்கு என்னவென்று புரியவில்லை அவசரப்பட்டு நாம போகக்கூடாத ஊருக்கு செல்கிறோமோ என்று இவனுக்கு சந்தேகம் வந்தது .மெதுவாக வியர்க்க தொடங்கியது அடிவயிற்றில் பயம் மெதுவாக பீடிப்பதை உணர்ந்தான் ராஜபாதுர் அவசரப்பட்டுவிட்டாய் என்று அவன் குரல் அவனுக்கே கேட்டது. இன்குல்லு என்று நடத்துனர் மிகவும் உரக்க சொன்னான். இவனுக்கு ஆவியே இல்லை. பேருந்திலிருந்து இறங்கும் முன் இன் குல்லு என்று முதன்முறையாக வாயை திறந்து நடத்துனரிடம் கேட்டான் நடத்துனர் கையை காண்பித்தார் அதிகோ அட்டு வெள்ளு அதோ அந்த வழியில் செல் என்றார் நடத்துனர் .
பேருந்திலிருந்து இறங்கினான் அவன் தனது தோளில் ஒரு தோல் பையை மாட்டியிருந்தான் அவ்வளவுதான் அவன் இறங்கியபொழுது மணி சரியாக 6.45 ஆகியிருந்தது .அவன் சுற்றிலும் பார்த்தான் கோட்டானின் அலறல் நரியின் ஊளை ஒன்றும் கேட்கவில்லை மயானஅமைதியாக இருந்தது உரத்த குரலில் கூப்பிட்டால் யாரேனும் வருவார்களா என்று யோசித்தான் ராஜ் பாதூர் உன் வாழ்க்கையில்;இழைத்த மிகப்பெரிய தவறு இது ஆள் நடமாட்டம் இல்லை. நண்பர்கள் அழைத்த போது சென்றிருநதால் இப்படி தனியாக மாட்டிக்கொண்டிருக்க வேண்டாம் போகும் வழி என்னமோ ஏதோ பேருந்தில் ஒருவர் பார்வையும் சரியாக இல்லை அவனுக்கு இருந்த ஒரே ஒரு ஆறுதல் நிலவு வெளிச்சம் மட்டுமே.அவனிடம் கைபேசிக்கூட கிடையாது அகப்பட்டு கொண்டாய் ராஜ்பாதுர் தப்பவே முடியாது.என்று தான் நின்ற இடத்தில் இருந்தே யோசித்தான் ....
அவன் செல்லும் வழியை சற்றே பார்த்தான் சுற்றிலும் ராக்ஷ்ச புற்கள் வழி ஆளரவம் கிடையாது கைகள் மெதுவாக ஜில்லிட்டு போனது. அப்படிப்பட்ட மாலை பொழுதிலும் பயத்தில் வியர்வையால் நனைந்துவிட்டது மெல்ல அடி மேல் அடி வைத்து தனது பயணத்தை துவங்கினான் ராஜ்பாதுர். ஒரு 25 அடி நடந்திருப்பான் வழியில் அவனை தவிர வேறு யாரும் இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை நிலவு வெளிச்சத்தில் மெதுவாக நடந்தான் சற்று தூரம் சென்ற பின்பு யாரோ அவனை பின்தொடர்வது போல் இருந்தது யாராக இருக்கும் ஒருவேளை .....இரத்தக்காட்டேரியோ என்று நினைத்து சட்டென்று திரும்பிட அங்கு யாரும் இல்லை மீண்டும் தனது பயணத்தை துவங்கினான் இப்பொழுது அவனை யாரோ பின்தொடருகிறார்கள் என்று நன்றாக உணரமுடிந்தது சுற்றி இருக்கும் ராக்ஷ்ச புற்கள் லேசாக அசைய துவங்கின. இவன் மெதுவாக திரும்பி பார்த்தான். புகை மண்டலமாக காட்சி அளித்தது இவன் மனதிற்குள் வேறு ஒரு கேள்வி ஒருவேளை அது அது அது முன்னே வந்து நின்றுவிட்டதோ அவசர பட்டு பின்னால் திரும்பி பார்த்தேனே யாரென்று பின்னால் பார்த்தவன் முன்னால் திரும்பி பார்க்க பயந்து கொண்டு கண்களை இருக்க மூடி கொண்டு மெதுவாக திரும்பி தனது கண்களை மெல்ல திறந்து முன்னே பார்த்தான்.
அவனது ஜீவன் அவனிடம் இல்லை தூரத்தில் ஓர் உருவம் அந்தரத்தில் தொங்கியபடி இருபுறமும் கைகள் நன்றாக விரித்துக்கொண்டும் இருந்த ஓர் கோரமான காட்சியை கண்டான்.அவனுக்கு பயத்தில் பற்கள் கூச துவங்கியது அவனால் அழ முடியவில்லை யாராவது இருக்கீங்களா என்று கேட்க முடியவில்லை கத்தி பேசினால் எங்கு அந்த உருவம் அருகில் வந்து விடுமோ என்று பயந்தான் நடக்க கால்கள் முன் வரவில்ல்லை பின்னேயும் செல்லவில்லை நிற்கவும் முடியவில்லை லேசாக தனது கால்களை முன்னே நகர்த்தி முன்னே செல்ல முயற்சித்து நகர துவங்கினான் இவன் மெதுவாக முன்னே செல்ல அந்த உருவம் மெல்ல அந்தரத்தில் அசைந்தது. நன்றாக இருள் சூழ்ந்து விட்டது மெதுவாக முன்னேற முன்னேற உருவத்தை இவன் நெருங்குகிறானா அல்லது உருவம் இவனை நெருங்குகிறதா என்று தெரியவில்லை அவன் பெரிய தவறு செய்துவிட்டதாகவே நினைத்தான் முன்னே செல்ல செல்ல உருவத்தை நெருங்கி முழுவதுமாக கண்டான் அகலவிரிந்த கண்கள் வாய் நன்றாக திறந்து இருந்தது கருத்த உருவம் இருக்கைகள் இருபுறமும் அகல உரித்துக்கொண்டு கண்முன் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டான் . இதே இடத்தில் நின்றிருந்தால் அடித்து கொன்றுவிடும் ஓடினால் வந்து பிடித்துகொள்ளும் உடம்பு உறைந்து போயிருந்தது ரத்த ஓட்டம் நின்றேவிட்டது என் செய்வது என்று தெரியாமல் சட்டென்று ஓடி பத்து அடி தள்ளி நின்றான்.
பின்னால் திரும்புவோமா வேண்டாமா திரும்பி பார்க்கலாம் என்று பார்த்தான். அந்த உருவத்திற்கு கொஞ்சம் தள்ளி ஒரு குள்ளமாக ஏதோ ஒன்று நகர்ந்து வந்தது அருகில் வரவே அது ஒரு பழுத்த முதியவர் என்று தெரிந்தது கையில் ஒரு விளக்கு வைத்திருந்தார்.இவனை கண்டதும் தன கையில் இருக்கும் ஒரு சிறிய துணி மூட்டையில் வெல்ல உருண்டைகள் சில வைத்திருந்தார் அதில் சில வெல்லங்களை அவனுக்கு அளித்து எங்க போகணும் யார் நீங்க என்று கேட்டார் அவன் மெதுவாக வாயை திறந்து ஐயா என்னை அந்த பேயிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்றான் ராஜ்பாதுர் அந்த முதியவர் நீ எங்க போகணும் என்று கேட்டார் முதியவர் இன்குல்லு என்றான் இவன் நீ போகிற ஊருக்கு வழிய அந்த பேய்கிட்ட கேட்கலாம் வா என்று அவன் கையை பிடித்து இழுத்து சென்றார் அந்த முதியவர் வரமாட்டேன் விடுங்க விடுங்க என்று கதறினான் முதியவர் விடவில்லை
அந்த உருவத்திடம் அழைத்து சென்றார் அவன் போகிற ஊருக்கு வழியை காண்பித்தார் இங்கு பார் என்றார் முதியவர் பின்புதான் தெரிந்தது அது பேயில்லை வழிக்காட்டி பொம்மை . இன்குல்லு என்று தெலுகுமற்றும் தமிழில் எழுத பட்டிருந்தது வழி காண்பித்த முதியவருக்கு நன்றி தெரிவித்து அவர் பின்னாலேய சென்று பத்திரமாக கிராமத்தை அடைந்தான்
சகோதர சகோதரிகளே
பேய்கள் வழிகாட்டும் சமூகத்தில் இருக்கும் நமக்கு உண்மையான வழிகாட்டிகள் பேயாகத்தான் தெரிவார்கள் சரிதானே இதற்கு மேலும் நான் சொல்லியா உங்களுக்கு தெரிய வேண்டாம் .
No comments:
Post a Comment