Thursday, November 18, 2021

 பரத கண்டத்தில் தெற்கு பகுதியில் இருக்கும் சாம்ராஜ்யங்களில் ஒன்று அமரேசபுரம் எனும் சாம்ராஜ்யம் . இந்த ராஜ்யத்திற்கு புளுகனூர் சமஸ்தானம் என்று மற்றுமோர் பெயர் உண்டு.இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் மறைவுக்கு பின்னர் இந்த ராஜ்ஜியம் புளுகனூர் சமஸ்தானம் என்றே அழைக்கப்படுகிறது, காரணம் இந்த ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த மகாராங்கியார்,அவளுடைய பெயர் தபஸ்வினி தேவி ஆனால்  மக்கள் வைத்த பெயர் தடாலடி தேவி   ஏனென்றால் தன் ராஜ்யத்தை தன் இஷ்டப்படி நடத்த தடாலடியாக புளுகுவாள். இவளுக்கும் அறிவிற்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால் கோவம் சுரீர் என்று வரும் தான் தவறு செய்தால் பிறரை நிந்திப்பதும் தனக்கு கோவம் வரும்போதெல்லாம் பிறருக்கு தண்டனை தருவதும் இந்த ராஜ்யத்தில் சகஜமே.. இப்படி இருக்க நமது தடாலடி தேவியாருக்கு புளுகுவதில் தன்னை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை. இருப்பினும் யாரேனும் இருப்பார்களேயானால் அவர்களை சிறையிலடைக்க வேண்டும் என்று  தோன்றியது. தேவியாரின் கட்டளை என்று மறுநாளே தண்டோரா போட்டனர்- புலும்மூட்டைகளுக்கு ஒரு சவால் புளுகுவதில் திறமை கொண்ட யாரேனும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.நம்பும்படி புளுகி  வெற்றி பெறுபவர்களுக்கு இரண்டு க்ராமங்கள் பரிசாக அளிக்கப்படும் மேலும் தோற்றால் சிறைத்தணடனை இப்படிக்கு அரசியின் கட்டளை என்று பறைசாற்றினர்.நமது மஹாரங்கியாருக்கு பயந்து யாரும் முன்வரவில்லை.வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு .நமது புளுகுவதிதேவியாரை  தோற்கடிக்க பக்கத்து கிராமத்திலிருந்து புளுகன் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன் கச்சந்தி புளுகன் பீப்பாய் புளுகன் என்று  பெயர் கொண்ட  ஐவர் வந்தனர் . தேவியாருக்கு சற்று ஆஷ்ச்சர்யம் எனக்கு போட்டியா தீர்த்துக்கட்டிவிடுகிறேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு ஐவரையும் சபைக்கு அழைத்தாள் போட்டி தொடங்கியது.முதலில் புளுகன் புளுக தொடங்கினான் அரசியாரே உங்களது ராஜயத்தின் எல்லைக்குள் நான் வரும் பொழுது ஒரு ஆலாவ்ருக்ஷத்தின் மேல் யானை ஒன்று உறங்கி கொண்டு இருந்தது என்றான்.உடனே அண்டப்புளுகன் தொடர்ந்தான் அரசியாரே அந்த யானை உறங்கி கொண்டி இருக்கும் மரத்திற்கு விதை விதைத்தவன் நான் நான் விதைத்த பொழுது அந்த யானை விதைக்கு மேல் வந்து நின்றது மரமாக வளரவே அதை மரத்தின் மேல் தங்கியே விட்டது என்றான் .நமது தடாலடி தேவியாருக்கு சற்று பொறாமையாக இருந்தது ஆம் அதை யாம் நன்கு அறிவோம் என்றார் .தேவியார் ஆகாச புளுகன் தொடர்ந்தான் அரசியாரே பௌர்ணமி அன்று பூர்ண சந்திரனை சுற்றி இருக்கும் பிரகாசம் அடியேன் எமது எழுதுகோலால் நான் இட்ட வட்டம் என்பதை யாரும் மருக்கமுடியாது.உடனே கச்சந்தி புளுகன் பிடித்து கொண்டான் .தேவியாரே உங்கள் முகத்தின் ப்ரகாசத்திற்கு முன் பூர்ண சந்திரன் அழகல்ல என்று தெரிந்து இவனுக்கு நான் இட்ட கட்டளையினால் இவன் இவனது எழுதுகோலால் சந்திரனை சுற்றிவட்டம் இட்டான். தோற்றுவிடுவோமோ என்று அஞ்சி  நமது பீப்பாய் புளுகன் வந்தான். அரசியாரே இவர்கள் புளுகவது புளுகே அல்ல நான் புளுகுகிறேன் நிற்க முடியாது இவர்களால் பாருங்கள். என்று புளுக தொடங்கினான் பீப்பாய்….“சபையோர்களே! என் பாட்டி கல்யாணத்திற்கு முகூர்த்தக்கால் நட்டார்கள். அப்போது நான் தான் தேங்காயுடைத்தேன். அதில் மேல் மூடி சப்த லோகமாகப் பரவிய ஆகாசமாயிற்று. கீழ்மூடி அதல, விதல, சுதல, தராதலமென்ற கீழ் ஏழு லோகமாயிற்று. நடுவிலிருக்கும் தேங்காய்நீர் சப்த சமுத்ரமாயிற்று. அதிலுள்ள திப்பி, நார் முதலியன சூரிய,சந்திர, நக்ஷத்ராதீ, தேவ, மனுஷ, மிருக, பக்ஷி, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரமென்ற மற்றெல்லாமாயின. இனிப் புளுகுவோரெல்லாம் இந்த ஈரேழு பதினான்கு லோகங்களுக்கு  அப்ப்லாலிருந்து புளுக வேண்டுகிறேன்” என்று சொல்லி அரசியை வணங்கி நின்றான் பீப்பாய் புளுகன்

தடாலடியா கொக்கா நமது  தடாலடி தேவியார்  தடாலடியாக  ஒரே ஒரு புளுகில் இவர்கள் அனைவரையும் தோற்கடித்தார் நீங்கள் அனைவரும் இங்கு வந்து புளுகுவதன் நோக்கம் என்னவோ நான் யாரையும் எந்த காரணத்திற்கும் அழைக்கவில்லையே என்றார் நமது தடாலடி தேவியார் .எனது நேரத்தை வீணடித்து சபையோருக்கும் அல்லல் கொடுத்த உங்கள் ஐவருக்கும் சிறைத்தணடனை விதிக்கிறேன் என்று சிறைலியில் அடைத்தார் அரசியார் .முடியுமா நமது தடாலடி தேவியாரிடம்    சகோதர சகோதரிகளே திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

1 comment:

  அபராஜிதா-part-6 அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக...