Saturday, December 4, 2021

 முன்பொரு காலத்தில் ஒரு ஊரில் சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார் எப்பொழுதும் தனது வேலை விஷயமாக போவதும் வருவதுமாக இருந்தார் ஒரு நீல் நாள் ஒரு  விபத்து நேர்ந்தது அதனால் அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது 

அதனால் அவர் நடக்க முடியாமல் போனதுசில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் அவர் தனது வேலைக்கு திரும்பினார் சரியாக நடக்க முடியாமல் போகவே ஒரு கழுதையை வாங்கினார் அதனை தனது போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொண்டார் இது  பல  நாட்கள்  தொடர்ந்தன சில நாட்கள் கிழக்கு நோக்கி பயணிப்பார் சில நாட்கள் மேற்கு நோக்கி  பயணிப்பார் சிலநாள் வடக்கு தெற்க்கு  என்று  அவரது பயணம் ஒரு ஒழுங்கு இல்லாமல் இருந்தது மக்கள்   பாவம்  யார் பெத்த பிள்ளையோ இப்படி பையித்தியம் என்று இவனை  பார்த்து பரிதாப பட்டார்கள்
ஒரு முறை வணிகன் செல்லும் பொழுது வணிகனை ஒருவன் நிறுத்தி  கேட்டான் ஏம்ப்பா என்ன இது ஒருநாள்  கிழக்கா போரஒருநாள்  மேற்கா போற  ஒருநாள் வேகமா போற ஒருநாள் சீக்கிரமா வந்துட்ற ஒருநாள் வரவேமாட்டேங்கிற என்ன பா  என்று கேட்டான் முன்ன மாதிரி  இல்லிங்க இப்ப இந்த கழுதையோட உதவி தேவை படுது நான் போக சொல்ற எடுத்துக்கு போக சொன்னேன் இந்த வழியா போக சொன்னேன்  என்றான் வணிகன் அப்பறம் என்ன ஆச்சு என்று கேட்டான் அவன்  என்ன பண்றது பொழப்பும் நடக்கணும் கழுதைக்கு சொல்லி புரியவைக்க முடியாது 
கழுதையோட போராட என்னால முடியாது அதனால நான் மாறிக்கிட்டேன்   கழுதை போற போக்குல நான்  போறேன்  அது கிழக்கால போனா அந்த  பக்கம் இருக்குற வேலையெல்லாம் முடிக்கிறேன் அது மேற்கால போனா அந்தப்பக்கம் இருக்குற வேலைய முடிச்சிக்கிறேன் இப்ப கழுதை எனக்கு பிரச்சனை இல்ல  வாழ்க்கை நிம்மதியா இருக்கு என்றான் வணிகன் சகோதர சகோதரிகளே  வாழ்க்கையும் இப்படித்தான் அலுவலகத்தில் சமுதாயகத்தில் ஒன்று அல்லது இரண்டு கழுதைகளாவது அவசியம் இருக்கும் கழுதையோடு போராடுவது கடினம் கழுதைக்கு சொல்லி புரியவைப்பதும் கடினம் கழுதை போகும் போக்கில் .....எனக்கு எதுக்கு 

No comments:

Post a Comment

  அபராஜிதா-part-6 அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக...