Thursday, October 21, 2021

 

இயற்கை எழில் சூழ்ந்த ஓர் அழகான ராஜ்ஜியம் அந்த ராஜ்யத்தை த்ரிமூர்த்த சக்கரவர்த்தி என்பவர் ஆட்சி புரிந்து வந்தார் அவர் தேஷாந்த்ரம் செல்ல முடிவு செய்து தான் கண்மூடித்தனமாக நம்பிய ஒருவனிடம் ராஜ்ய பொறுப்பை ஒப்படைத்து சென்றார். அவனது பெயர் ராஜாதி ராஜ மஹா மூட பகதூர் ஆட்சி பொறுப்பு தன் கைக்கு வந்த உடன் தன் இஷ்டத்திற்கு ஆடொஆடென்று ஆடினான். அவனுக்கு கீழ் ஓர் பணிப்பெண். சதா சர்வ காலமும் ஜால்ரா போட்டு கொண்டே இருப்பாள்.  முட்டாள் அரசன்  பீமன் மரத்தை பிடிங்கினான் என்று சொன்னால் இவளும் உடனே டிங்கினான் டிங்கினான் டிங்கினான் என்று சொல்வாள். இவளது ஜால்ராவுக்கு அளவே கிடையாது ராஜாதி ராஜ மஹாமூட பகதூர் நல்லவன் போன்று நடிப்பதிலும்  புத்திசாலியாக முட்டாள்தனங்கள் செய்வதிலும் வல்லவன். வரி மீது வரி போட்டு ஜனங்களை வாட்டினான். தான் ஒரு முட்டாள் என்பதை அரசன் நொடிக்கு ஒரு முறை காட்டினான். இப்படி இருக்க இவனது ராஜ்ஜியத்தில் முருகன் என்று கொல்லன் இருந்தான் கில்லாடி விஷயங்கள் தெரிந்த கொல்லன் இவன் பல தரமான பொருட்களை செய்து மக்களுக்கு உபயோகத்திற்கென கொடுத்து அவர்கள் வேலையை எளிமையாக்கி நற்பெயர் பெற்றான்
அரசனுக்கு திடீரென்று ஓர் ஆசை அவனிடம் மிக நீளமும் அகலமும் கொண்ட ஓர் இரும்பு கோல் ஒன்று இருந்தது. அதை உருக்கி நல்லதோர் இரும்பு மனிதனை தயாரிக்க வேண்டும் என்று அரசன் முருகனை பற்றி கேள்வி பட்டு அவனை அழைத்து வர காவலாளிகளை அனுப்பி வைத்தான். பாவம் முருகன் ராஜாதி ராஜ மஹாமூட பகதூர் பற்றி முழுவதும் தெரியாமல் சென்று அரசனை கண்டான். பணிகிறேன் அரசே !என்றான் முருகன் உன் பணிவு  எனக்கு தேவை இல்லை. நான் சொல்லும் கார்யத்தை நீ முடித்து தர வேண்டும். இல்லா விட்டால் உன் தலை கொய்யபட்டு கழுகுகளுக்கு தீனியாக அளிக்கப்படும். சரியா? என்றான் அரசன். முருகன் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டான். அரசன் மேலும் சொன்னான். இந்த இரும்பை பார், இதை உருக்கி ஓர் இரும்பு மனிதனை தயார் செய்து தா என்றான் அரசன். முருகனோ இவ்வளவுதானா அரசே! எளிதில் முடிக்கிறேன் என்றான் முருகன் யோசிக்காமல்.

 அரசன் சொன்னான்… முருகா நன்றாக கவனி இரும்பு மனிதனை தயார் செய்ய வேண்டும் என்றான். சரி ஆகட்டும் அரசே !அப்படியே செய்துவிடுகிறேன் என்றான். இங்கே பார் முருகா நீ தாயார் செய்யும் இரும்பு மனிதன், மனிதனை போன்று ஓர் உயிருள்ள்ளதாகவே இருக்க வேண்டும். புரிந்ததா என்றான் பகதூர்! முருகன் திகைத்து நின்றான். அரசே…… என்று இழுத்தான் முருகன். முருகா ஒப்பு கொண்டு விட்டாய் வேலை முடிக்க பட வேண்டும். இல்லையேல் ஜாக்கிரதை என்று சொல்லி அனுப்பினான் மன்னன் முருகனுக்கு இரவு முழுவதும் ஒரு பொட்டுக்கூட தூக்கம் வரவில்லை இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்றும் புரியவில்லை மிகுந்த வருத்தத்தோடு இருந்தவன் தனது தாத்தாவிடம் பேசினால் தீர்வு கிடக்கும் என்று நினைத்து தனது தாத்தாவிடம்

 இதற்கான தீர்வை கேட்டான். முருகா இப்படி மாட்டிக்கொண்டுவிட்டாயே. சரி உனக்கு யோசனை சொல்கிறேன் கேள். மன்னன் தயாரிக்க சொன்னது மனிதன் என்பதால் அதிசய பொருட்கள் சிலவற்றை கேள் அதை தந்த உடன் நான் வேலையை துவங்குகிறேன் என்று சொல்.

 மறுநாள் அரசனை காண சென்றான் முருகன் அரசே எனக்கு நீங்கள் சொன்ன வேலையை முடிக்க ஒரு சில பொருட்கள் தேவை என்றான். அதென்ன பொருட்கள் சொல் தருகிறேன் என்றான். அரசன் இரும்பினை உருக்கிய உடன் அதனை குளிர்விக்க தண்ணீர் வேண்டும் நீங்கள் உயிரும் உணர்வும் உள்ள ஓர் சிலையை  கேட்டதால் இரும்பின் எடைக்கு நிகராக கண்ணீரால் நிரம்பிய பானைகள் வேண்டும், மேலும் அந்த மனிதனுக்கு தலையில் முடியினை வைக்க இரும்பு  எடைக்கு நிகராக  முடிகள் வேண்டும், அவனுக்கு உடுப்புகள் தைக்க இரும்பின் எடைக்கு நான்கின் ஒரு பகுதி எடைக்கு பருத்தி வேண்டும் அரசே .

முடித்து தர படும் என்றான் அரசன்.

அவ்வள்வுதான் மறுநாள் ஜால்ரா கோஷ்டி ஊர் முழுக்க தண்டோரா போட்டது.  நாட்டில் உள்ள பருத்தி அனைத்தும் கொண்டு வருமாறு உத்தரவு போட்டான், நாட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் மொட்டையடித்து தங்கள் முடியினை அரசாங்கத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டான், வீட்டிற்கு ஒரு பானை தரப்படும் தங்கள் வீட்டில் உள்ள நபர்கள் அழுது கண்ணீரால் இந்த பானையை ஒரு வார காலத்திற்குள் நிரப்ப வேண்டும், என்று உத்தரவு போட்டான்.

இதென்ன பைத்தியக்காரத்தனமான உத்தரவு இப்படி புத்தியில்லாத அரசனுக்கு கீழே பாவம் அப்பாவி மக்கள் என்ன செய்ய முடியும் .அழுது பானையை நிரப்ப முயன்றார்கள். கால்வாசிகூட நிரம்பவில்லை. அப்படி கொஞ்சம் நிரம்பினால் நீராவியாகி பானை காலியாகி இருந்தது மன்னனின் முட்டாள் தனமான கட்டளைகளால் நாட்டில் குழப்பமே மிஞ்சியது. இப்படி இருக்க தேஷாந்த்ரம் சென்ற சக்ரவர்த்தி நாடு திரும்பினார். தன் மக்களின் நிலையை கண்டு வருந்தி அவனுக்கும் அந்த ஜால்ராவுக்கும் தக்க தண்டனை அளித்தார்.

 சகோதர சகோதரிகளே! நான் என்ன சொல்வது  உங்களுக்கே புரிந்திருக்கும்  

மீண்டும் ஓர் கற்பனை கதையில் சந்திப்போம்

 நன்றி வணக்கம்  

 

இயற்கை எழில் சூழ்ந்த ஓர் அழகான ராஜ்ஜியம் அந்த ராஜ்யத்தை த்ரிமூர்த்த சக்கரவர்த்தி என்பவர் ஆட்சி புரிந்து வந்தார் அவர் தேஷாந்த்ரம் செல்ல முடிவு செய்து தான் கண்மூடித்தனமாக நம்பிய ஒருவனிடம் ராஜ்ய பொறுப்பை ஒப்படைத்து சென்றார். அவனது பெயர் ராஜாதி ராஜ மஹா மூட பகதூர் ஆட்சி பொறுப்பு தன் கைக்கு வந்த உடன் தன் இஷ்டத்திற்கு ஆடொஆடென்று ஆடினான். அவனுக்கு கீழ் ஓர்

 பணிப்பெண். சதா சர்வ காலமும் ஜால்ரா போட்டு கொண்டே

 இருப்பாள்.  முட்டாள் அரசன்  பீமன் மரத்தை பிடிங்கினான்

என்று சொன்னால் இவளும் உடனே டிங்கினான் டிங்கினான்

 டிங்கினான் என்று சொல்வாள். இவளது ஜால்ராவுக்கு அளவே

 கிடையாது ராஜாதி ராஜ மஹாமூட பகதூர் நல்லவன் போன்று

 நடிப்பதிலும்  புத்திசாலியாக முட்டாள்தனங்கள் செய்வதிலும் வல்லவன். வரி மீது வரி போட்டு ஜனங்களை வாட்டினான்.

 தான் ஒரு முட்டாள் என்பதை அரசன் நொடிக்கு ஒரு முறை

 காட்டினான். இப்படி இருக்க இவனது ராஜ்ஜியத்தில் முருகன்

 என்று கொல்லன் இருந்தான் கில்லாடி விஷயங்கள் தெரிந்த

 கொல்லன் இவன் பல தரமான பொருட்களை செய்து

 மக்களுக்கு உபயோகத்திற்கென கொடுத்து அவர்கள்

 வேலையை எளிமையாக்கி நற்பெயர் பெற்றான்


அரசனுக்கு திடீரென்று ஓர் ஆசை அவனிடம் மிக நீளமும்

 அகலமும் கொண்ட ஓர் இரும்பு கோல் ஒன்று இருந்தது. அதை

 உருக்கி நல்லதோர் இரும்பு மனிதனை தயாரிக்க வேண்டும்

 என்று அரசன் முருகனை பற்றி கேள்வி பட்டு அவனை

 அழைத்து வர காவலாளிகளை அனுப்பி வைத்தான். பாவம்

 முருகன் ராஜாதி ராஜ மஹாமூட பகதூர் பற்றி முழுவதும்

 தெரியாமல் சென்று அரசனை கண்டான். பணிகிறேன் அரசே !

என்றான் முருகன் உன் பணிவு  எனக்கு தேவை இல்லை. நான்

 சொல்லும் கார்யத்தை நீ முடித்து தர வேண்டும். இல்லா

 விட்டால் உன் தலை கொய்யபட்டு கழுகுகளுக்கு தீனியாக

 அளிக்கப்படும். சரியா? என்றான் அரசன். முருகன் வேறு

 வழியில்லாமல் ஒப்புக்கொண்டான். அரசன் மேலும்

சொன்னான். இந்த இரும்பை பார், இதை உருக்கி ஓர் இரும்பு

 மனிதனை தயார் செய்து தா என்றான் அரசன். முருகனோ

 இவ்வளவுதானா அரசே! எளிதில் முடிக்கிறேன் என்றான்

 முருகன் யோசிக்காமல்.

 அரசன் சொன்னான்… முருகா நன்றாக கவனி இரும்பு

 மனிதனை தயார் செய்ய வேண்டும் என்றான். சரி ஆகட்டும்

 அரசே !அப்படியே செய்துவிடுகிறேன் என்றான். இங்கே பார்

 முருகா நீ தாயார் செய்யும் இரும்பு மனிதன், மனிதனை

 போன்று ஓர் உயிருள்ள்ளதாகவே இருக்க வேண்டும். புரிந்ததா

 என்றான் பகதூர்! முருகன் திகைத்து நின்றான். அரசே……

 என்று இழுத்தான் முருகன். முருகா ஒப்பு கொண்டு விட்டாய்

 வேலை முடிக்க பட வேண்டும். இல்லையேல் ஜாக்கிரதை

 என்று சொல்லி அனுப்பினான் மன்னன் முருகனுக்கு இரவு

 முழுவதும் ஒரு பொட்டுக்கூட தூக்கம் வரவில்லை இதிலிருந்து

 எப்படி தப்பிப்பது என்றும் புரியவில்லை மிகுந்த வருத்தத்தோடு

 இருந்தவன் தனது தாத்தாவிடம் பேசினால் தீர்வு கிடக்கும்

 என்று நினைத்து தனது தாத்தாவிடம்

 இதற்கான தீர்வை கேட்டான். முருகா இப்படி

 மாட்டிக்கொண்டுவிட்டாயே. சரி உனக்கு யோசனை

 சொல்கிறேன் கேள். மன்னன் தயாரிக்க சொன்னது மனிதன்

 என்பதால் அதிசய பொருட்கள் சிலவற்றை கேள் அதை தந்த

 உடன் நான் வேலையை துவங்குகிறேன் என்று சொல்.

 மறுநாள் அரசனை காண சென்றான் முருகன் அரசே எனக்கு

 நீங்கள் சொன்ன வேலையை முடிக்க ஒரு சில பொருட்கள்

 தேவை என்றான். அதென்ன பொருட்கள் சொல் தருகிறேன்

 என்றான். அரசன் இரும்பினை உருக்கிய உடன் அதனை

 குளிர்விக்க தண்ணீர் வேண்டும் நீங்கள் உயிரும் உணர்வும்

 உள்ள ஓர் சிலையை  கேட்டதால் இரும்பின் எடைக்கு

 நிகராக கண்ணீரால் நிரம்பிய பானைகள் வேண்டும், மேலும்

 அந்த மனிதனுக்கு தலையில் முடியினை வைக்க இரும்பு

  எடைக்கு நிகராக  முடிகள் வேண்டும், அவனுக்கு உடுப்புகள்

 தைக்க இரும்பின் எடைக்கு நான்கின் ஒரு பகுதி எடைக்கு

 பருத்தி வேண்டும் அரசே .

முடித்து தர படும் என்றான் அரசன்.

அவ்வள்வுதான் மறுநாள் ஜால்ரா கோஷ்டி ஊர் முழுக்க

 தண்டோரா போட்டது.  நாட்டில் உள்ள பருத்தி அனைத்தும்

 கொண்டு வருமாறு உத்தரவு போட்டான், நாட்டில் உள்ள

 ஆண்கள் அனைவரும் மொட்டையடித்து தங்கள் முடியினை

 அரசாங்கத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டான், வீட்டிற்கு ஒரு

 பானை தரப்படும் தங்கள் வீட்டில் உள்ள நபர்கள் அழுது

 கண்ணீரால் இந்த பானையை ஒரு வார காலத்திற்குள் நிரப்ப

 வேண்டும், என்று உத்தரவு போட்டான்.

இதென்ன பைத்தியக்காரத்தனமான உத்தரவு இப்படி

 புத்தியில்லாத அரசனுக்கு கீழே பாவம் அப்பாவி மக்கள் என்ன

 செய்ய முடியும் .அழுது பானையை நிரப்ப முயன்றார்கள்.

 கால்வாசிகூட நிரம்பவில்லை. அப்படி கொஞ்சம் நிரம்பினால்

 நீராவியாகி பானை காலியாகி இருந்தது மன்னனின் முட்டாள்

 தனமான கட்டளைகளால் நாட்டில் குழப்பமே மிஞ்சியது.

 இப்படி இருக்க தேஷாந்த்ரம் சென்ற சக்ரவர்த்தி நாடு

 திரும்பினார். தன் மக்களின் நிலையை கண்டு வருந்தி

 அவனுக்கும் அந்த ஜால்ராவுக்கும் தக்க தண்டனை 

அளித்தார்.

 சகோதர சகோதரிகளே! 

நான் என்ன சொல்வது  உங்களுக்கே புரிந்திருக்கும்  

மீண்டும் ஓர் கற்பனை கதையில் சந்திப்போம்

 நன்றி வணக்கம்  

 


Sunday, October 17, 2021

 APARAJITHA-PART-2

அனைத்தும் தோல்வியுற்ற பின்  கடவுள் என்பது பெரிதாக ஒன்றும் இல்லை என்ற மனோநிலையில் இருந்தாள் அபராஜிதாவின் நெருங்கிய தோழியான சாருஸ்மிதா. சாருஸ்மிதாவை பற்றி சொல்லவேண்டும் என்றால் தான் ஒரு பணிப்பெண் மட்டுமே இளவரசியின் தோழியாக தன்னுடைய அந்தஸ்தை உபயோகித்தவள் அல்ல சாருஸ்மிதா. ஆனால் இளவரசிக்கு இவளை கண்டால் சற்றே பொறாமை உண்டு ஏனென்றால் தனக்கு சமமான அழகி ராஜ்யத்திலேயே அவள் மட்டும்தான்.இவை ஒரு புறம் இருக்க தனது தோழியான இளவரசிக்கு நேர்ந்ததை நினைத்து கவலை கொண்டாள் சாரு ஸ்மிதா .ஆனால் அபராஜிதாவுக்கோ அகத்திலோ புறத்திலோ எந்த கவலையும் இருப்பதாக தெரியவில்லை. ஏன் தான் இளவரசி என்பதாலோ ?

          ஸ்வர்ணபுரிக்கு மிக அருகாமையில் உள்ள ராஜ்யங்களில் ஒன்று ஷஹஜீந்தபுரம் அரசன் சிம்ஹேந்த்ரனின் பார்வைக்கு கட்டுப்பட்டு செழிப்புடன் திகழும் ராஜ்யமிது தன் ராஜ்ஜியத்தில் இருக்கக்கூடிய அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து சத்யம் தவறாது ஆட்சி புரியும் அரசன் சிம்ஹேந்த்ரன். ஸ்வர்ணபுரியின் அரசன் பவ்யன் இறந்ததை கேள்விப்பட்டு நோவதை தவிர என்னதான் செய்ய முடியும். பவ்யன் தர்மம் மார்கத்தை கடைபிடித்தவனே.ராஜ்ஜியத்தின் அரசன் சரியாக இருந்தால் போதுமா. மந்திரியும் முக்கியமாயிற்றே.

                           ஸ்வர்ணபுரியின் மந்திரி வராளபிரம்மன். சதி செய்து அரசனையும் வீழ்த்தி  தான் சிம்ஹாசனத்தில் அமர்ந்து ,போதும் போதும் ஸ்வர்ணபுரிக்கு வந்த சோதனை. தகுதியற்ற ஒருவனை எப்படி தலைவனாக ஏற்க முடியும் ? ஸ்வர்ணபுரியின் மக்கள் எங்கு எல்லை கடந்து வேற்று ராஜ்யத்திற்கு சென்று விடுவார்கள் என்று ராஜ்ஜியத்தின் எல்லையில் காவல் வைத்தான் வராளபிரம்மன்.

 

 

 

ஷஹஜீந்த்ரபுரத்து அரசன் சிம்ஹேந்த்ரன்  ஸூக்ஷ்ம புத்தி கொண்டவன்.அரசன் பவ்யன் தர்மத்தை கடைபிடித்து ஆட்சி செய்தவன்தான் ஆனால் அபராஜிதா ஜனித்த க்ஷணமே அரசியாரும்  பவ்யனின் பட்டமஹிஷி மனோரசிகா தேவி இறந்த பின்பு பவ்யனின் போக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டது மந்திரியின் சதியால் பவ்யன் பவ்யமற்று போனதையும் நன்கு அறிந்தவன் அரசன் சிம்ஹேந்த்ரன்,மேலும் பவ்யனின் பட்டமஹிஷி மனோரசிகா தேவி  தனது குருவும் ஷஹாஜிராஜ்யத்தின் தன்னிகரற்ற அரசனுமான ஸ்ரீ ஸ்ரீ ஸாரஸ மஹாமஹேந்திரனின் தேளஹித்ரியும் ஆவார்  அதனால்தான் ஸ்வர்ணபுரியை காப்பாற்றும் பொறுப்பு தன்னிடம் இருப்பதாக உணர்ந்தார் சிம்ஹேந்த்ரன் ……………………

அரசன் சிமஹேந்த்ரன் சுப்பராயரிடம் சீட்டிகை கொடுத்து தூது அனுப்பினார் சுப்பராயன் ஒன்றும் மனிதன் அல்ல. ஸ்வர்ணபுரீ ராஜ்யத்தில் ஜலாண்டஜ மண்டலீ கார்கோடக தக்ஷக குளிக பத்ம மஹாபத்ம ஷங்கபல காளிங்காதிகள் போன்ற 26  சர்பவகைகள் சுற்றி திரிவது உண்டு ஆதலால் கொம்பேறிமூக்கன் என்ற ஓர் சர்பத்திடம் தூது அனுப்பினார் அந்த சர்பத்தை அரசர் சுப்பராயா  என்ற அழைப்பது வழக்கம்.

சரியாக சிம்ஹ மாச சதுர்தஷி திதி, இரவு மெல்லிய குளிர்ந்த காற்று, இரு  சந்த்ரகாந்தங்கள் மின்னல் போன்று அழகாக ஜொலித்தது .ஒன்று சாருஸ்மிதா ,மற்றொன்று  அபராஜிதா, சிவந்த கண்களுடன் நோக்கினான் சுப்பராயன் அல்ல   மந்திரி  வராளப்ரம்மன். அபராஜிதாவை பார்த்தனன் இப்பொழுது சூழ்நிலைகள் அவனுக்கு எதிராகவே இருந்தன வேறென்ன செய்யமுடியும் திரும்பிச்சென்றுவிட்டான்.

சுப்பராயன் மெதுவாக உள் நுழைந்து சாருஸ்மிதாவை நெருங்கினான் சாருஸ்மிதா கண்கள் விழித்து பார்த்த பொது பயத்தில் கூச்சலிட வாயை திறந்தாள் அவளது வாயை வேகமாக தனது கைகளால் மூடினாள் அபராஜிதா.உறங்குவது போல் நடித்தே ஆகவேண்டியா கட்டாயம் இருவருக்கும். அபராஜிதா ஒரு மான்குட்டியை பிடிப்பது போல் பிடித்து  அதன் வாயிலிருக்கும் சீட்டிகையை எடுத்து கீழே விட்ட க்ஷண நேரத்தில் மறைந்தான் சுப்பராயன் ஏனென்றால் சுப்பராயன் போன்ற கொம்பேறிமூக்கினத்தை சேர்ந்த சர்ப்பங்கள் துள்ளுவதும் மரத்தில் ஏறுவதும் வழக்கம்தான் .அபராஜிதா சீட்டிகையை எடுத்து பார்த்தபோது அதில் குறிப்பு இருந்தது

“ஜித பாரிஜாத வர பாரிஷிக பௌர்ணமி சிஹசிஹா”

                என்று எழுதப்பட்டிருந்தது. ஆம் அரசர்கள் தூது விடுவதற்கு உபயோகப்படுத்திய மொழி  ப்ராஹ்மி மொழி.பார்த்தவுடன் புரிந்துகொண்டாள் அபராஜிதா. ஜிதபாரிஜாத (அபராஜிதா) பாரிஷிக ( பாரிஷிக நதிக்கரையில்) வர  (வராங்கதன் மண்டபத்தில் ) பெளர்ணமி நாளன்று சிஹசிஹா (வருகவே) என்று அதன் பொருள். எப்படியும் அரசன் சிமஹேந்த்ரனை காண செல்ல வேண்டும் எப்படி ........தனது தோழி சாருஸ்மிதாவை  கண்டாள் அபராஜிதா தோழிகள் என்றாலே இப்படித்தான் எதிலாவது  சிக்கித்தானே ஆகவேண்டும்.அவ்வளவுதான்  இளவரசியின் உடையில் சாருஸ்மிதா  அபராஜித சாதாரண பணிப்பெண் வேடத்தில் வெளியே சென்றாள்

பெளர்ணமி நாளன்று வராங்கதன் மண்டபத்தின் தென்கரையில் சிம்ஹேந்த்ரன் அபராஜிதா தனது மகள் வயதே நிரம்பிய அபராஜிதாவை கண்டு கண்கலங்கினான்.

கலங்குவதற்கு நேரமல்ல அரசே அபராஜிதாவின் குரல்

 நீ சற்று நிதானமாக யோசித்திருந்தால் உன் காதல் திருமணம் இனிதே நடந்திருக்கும் சிம்ஹேந்த்ரனின் குரல் 

அபராஜிதாவின் பதில் அரசனை திகைக்க செய்தது. என் காதல் திருமணம் இனிதே நிறைவேறும் அரசே அரசன் விக்கித்து போனான்

 எப்படி சாத்தியம் அரசன் மனதில் நினைத்து பேச துவங்கும் முன்னரே

மேலும் அபராஜிதாவின் குரல் நாட்டை காப்பற்ற செய்வன உடனடியாக செய்யுங்கள் அரசே. ஓர் இளவரசியாக தனக்கு பொறுப்புகள் இருப்பதை உணர்ந்தாள் அபராஜிதா.அரசன் சிம்ஹேந்த்ரனும் அபராஜிதாவும் திறமையாக திட்டம் தீட்டினர்.

இவர்கள் பேசுகையில் க்ஷணநேரம்தான் அம்பு மழை பொழிய தொடங்கியது. அபராஜிதா ராஜ்யத்தை காப்பாற்ற தான் வைத்திருக்கும் அந்திம பிரம்மாஸ்திரம் அரசன் சிம்ஹேந்த்ரன் மட்டுமே ......அம்புகள் நுனியில் விஷம் பூசியிருப்பதை இருவரும் உணர்ந்தனர் தப்பிக்கும் முயற்சியில் சிம்ஹேந்த்ரன் சாரதியயை நோக்கினான்  சாரதியின் உச்சந்தலையில் அம்பு தைக்கப்பட்டு அங்கேயே  உயிர் பிரிந்தே இருந்தது கண்ணிமைக்கும் நேரத்தில் அபராஜிதாவின் வலது தோளில் அம்பு தைத்தது மேலும் சிம்ஹேந்த்ரனுக்கு……….. தொடரும் 

 

அபராஜிதா-part-3

அபராஜிதாவின் வலது தோளில் அம்பு தைத்தது.ஆனாலும் மூர்ச்சை ஆகவில்லை.  போரிட்டு வீரமரணம் அடையும் தருணம் இதுவல்ல என்பதை இருவரும் உணர்ந்திருந்தனர். அரசன் சிம்ஹேந்த்ரன் சற்றும் எதிர்பாராதவனாய் அபராஜிதாவுடன் வேகமாய் வரங்கதான் மண்டபத்தில் கிழக்கு மூலையை நோக்கி நகர்ந்தான். அம்பு மழையில் இருந்து தப்பிய இருவரும் உயிர்பிழைத்தனர். ஆனால் அதோடு நிற்கவில்லை. வீரர்களின் காலடி ஷப்தங்கள் மண்டபத்தை ஆட்டம் காண செய்தது. அபராஜிதாவின் வலது தோள்கள் நீலம் பாய்ந்திருந்தது. ஆனாலும் விடாது மன்னனோடு விரைவாக நகர்ந்தாள் அபராஜிதா.

          இருவரும் வராங்கதன் மண்டபத்தின் கிழக்கு மூலையில் அக்னிஷேஷ ஜலத்தில் இறங்கி வேகமாக நீந்த துவங்கினர். அரசன் எதிர்பார்க்கவில்லை. விஷத்தின் வீர்யம் அபராஜிதா மூர்ச்சையானாள். சிம்ஹேந்த்ரன் தளர்வடையாமல், அபராஜிதாவின் வேணியை பற்றி இழுத்தவாரு நீந்த துவங்கினான். அக்னிஷேஷ ஜலம் ஷஹஜீந்த்ரபுரத்து ராஜ்யத்தின் பொக்கிஷம் என்றே கூறவேண்டும். பாரிஷீக நதியின் ஜீவநாடியாக விளங்குவது இந்த ஜலம்தான்.  நவரத்னங்களும் அனாயாசமாக புரண்டுகொண்டே இருக்கும்.  மற்ற ஜலத்தை போன்று அல்லாமல் இவை பச்சை நிறத்தில்   ப்ரகாஷிக்கும் தன்மை கொண்டது அதனாலேயே இதற்கு மரகதத்ராவகம் என்றும் சொல்வதுண்டு இந்த ராஜ்யத்தில்  குளிர் காலத்தில் வெப்பத்துடனும் கோடையில் ஷீத்தளத்துடனும் இருப்பது இந்த அக்னிஷேஷ ஜலத்தின் விஷேஷம்.

           ஷஹஜீந்த்ரபுரத்து ராஜ்யத்தின் அரச பரம்பரையை தவிர வேறு யாரும் இதில் நீந்துவதென்பது சாத்யமாகாது மீறினால் சுப்பராயனின் வீரர்களுக்கு இரையாவது நிஷ்சயம் அக்னிஷேஷம்  அரசனின் சுரங்கம்.ஜலசுரங்கம் என்பது கிருஷ்ணதேவராயர் காலத்தையொட்டு இருப்பது அனைவரும் அறிந்த உண்மையன்றோ  எப்படியோ இருவரும் அரண்மனையை அடைத்தனர்.

ஆனால் அபராஜிதா இருப்பதுவோ ஷஹஜீந்த்ரபுரத்தில் சாருஸ்மிதாவின் நிலையென்ன. பாவம் சாருஸ்மிதா அப்பாவிப்பெண் வகையாக சிக்கி கொண்டாள். அபராஜிதாவை காணாது அவள் தவித்த தவிப்பை வார்த்தைகளால் வர்ணிப்பது கடினமே.அபராஜிதா சென்றபின்பு தான் ஒரு இளவரசியாக நடிப்பது வராளனுக்கு தெரிந்தால் உயிரோடு சேர்ந்து  மா……….மும் போய் விடும்.

நித்யமும் வராளன் அபராஜிதாவை காண அவளின் அந்தப்புரத்துக்கு வருவதுண்டு.அன்றைய தினம் அபராஜிதாவை காணாது சாருஸ்மிதாவிற்கு சற்றே வேர்க்க துவங்கியது. உடலில் லேசாக அல்ல நன்றாகவே நடுக்கமும் இருந்தது. அடி வயிற்றில் பயத்தின் தாக்கம். அந்தப்புரத்தில் பட்டு மெத்தையில் அமர்ந்தாள், நிற்கலாம் போல் இருந்தது, நின்றாள்,  சரி நடப்போம், என்று நடந்தாள். வேண்டாம் சற்றே அமர்வோம், என்று அமர்ந்தாள். சாருஸ்மிதாவின் காதுகளுக்கு காலடி ஷப்தங்கள் கேட்க துவங்கியது. ஐயோ! சாருஸ்மிதாவிற்கு ரத்த ஓட்டம் நின்றது. ஏனென்றால் அது வராளனின் காலடி ஷப்தங்கள்!

அபராஜிதாவோடு முழுவதுமாக அரண்மனையை அடைந்தான் அரசன் சிமஹேந்த்ரன். ஏன் ? அரசனின் புத்திக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் ? யாரது அம்புகள் ? ஏன் கொல்ல வேண்டும் ? வராளனின் காதுகளுக்கு எட்டியிருந்தால் ? இது வராளனின் செய்கையோ ? அரசன் யோசித்து கொண்டிருக்க மந்திரி ஆதிரேஷ திம்மருசு  அரசன் முன்பு நிற்க, மந்திரி! அரண்மனை வைத்தியரை  அழைத்து வாருங்கள்.

 நொடி பொழுதில் அரசே! என்று சொல்லி முடித்து, ஜலபிந்து கீழே சிந்தும் க்ஷணம் வைத்தியர் மன்னனின் முன்பு. அபராஜிதாவை  வைத்தியர் காணும் பொழுது அவள்  வலதுதோள் மற்றும் கைகள் முழுவதும் நீலம் பாய்ந்திருந்தது அபராஜிதா மூர்ச்சைதான் ஆகி இருந்தாளே அன்றி அவள் உயிருக்கு எந்த தீங்கும் இல்லை வைத்யனின் பதில் மன்னனுக்கு சற்றே ஆறுதல் தந்தது ஆனால் மீண்டும் வைத்தியன் கூறியதை கேட்டு அரசன் திடுக்கிட்டான்.

வராளனின் காலடி ஷப்தங்கள் கேட்டு செய்வதறியாது திகைத்து நிற்க சிம்ஹகுரலோன் வராளன் அபரா என்று அழைத்ததுமே  அந்தப்புரத்தின் கதவுகள் ஆக்ரோஷமாக திறந்தன மதம்கொண்ட யானையின் மத்தத் தை பிளந்து ரத்தத்தை உறிஞ்சும் சிங்கத்தை கண்டு சிலையாக நிற்கும் மனிதர்களை போல் அசையாது நின்றிருந்தாள் சாரு......ஆஹா இங்கு நான் வந்திருப்பது சரியான நேரம் என்றே கருதுகிறேன் எங்கே உனது பணிப்பெண் சாருஸ்மிதா நல்ல வேளை அவள் இங்கு இல்லையோ சரி என்று பேசியவாறே அருகே நெருங்கினான் வராளன் .வராளனின் காலடி ஷப்தங்கள் அருகில் நெருங்க நெருங்க ...

நேரம் நெருங்க நெருங்க அபராஜிதாவின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் செயலிழக்கும். இந்த அம்பில் தடவப்பட்டிருப்பது பாடலாக்ராதம் என்ற ஹாலாஹலத்திற்கு ஒப்பான   அரியவகை விஷம் அரசே. அரசன் செய்வதறியாது நின்றான். வைத்தியரே அபராஜிதா காப்பாற்றப்படவேண்டும் என்ன மார்க்கம்? என்றார் மந்திரி ஆதிரேஷ திம்மருசு.

மஹாமந்த்ரி கெளரி சிகரத்தின் வடதிசையில் உள்ள புத்னோங்கிரி பகுதிகளில் உள்ள கழுகுகளின் கூடுகளை கொண்டு வருவதே அபராஜிதாவின் விஷமுறிவுக்கான மருந்து நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது.  அரசே பாருங்கள் நாம் ஆலோசிக்கும் சமயத்தில் அபராஜிதாவின் வலது உடல் பகுதியிலிருந்து இடது பகுதிக்கு விஷம் பாய்ந்து கொண்டிருக்கிறது. பாருங்கள்! அபராஜிதவன் இடது தோளிலும் நீலம் பாய்ந்திருக்கிறது.விஷம்  நெருங்க நெருங்க………..

 அபரா! என்று ஆக்ரோஷத்துடன் வராளனின் குரல் சாருஸ்மிதாவின் அருகில் நெருங்க நெருங்க…………………….. தொடரும்.    


  அபராஜிதா-part-6 அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக...