முன்னொரு காலத்தில் சோணகிரி என்று ஒரு அழுகிய சாம்ராஜ்ஜியம் இருந்தது.இந்த ராஜ்யத்தை மூக்ஷக தேவியார் என்ற அரசி ஆண்டு ஆட்டிப்படைத்து வந்தார் இவரது ஆட்சியில் திருட்டு பயம் என்பது கிடையாது ஏனென்றால் அரண்மனை வாசிகளே திருடி விடுவார்கள் சொல்லப்போனால் கொள்ளையர்களுக்கு வேலை இல்லாமல் இருந்தது .அரசி யாரை கண்டாலும் வஞ்சக எண்ணத்துடன் சிரித்து சிரித்து பேசுவார் .அவர் அரண்மனை சென்ற பின்பு அரசியார் யாருடன் பேசினாரோ அவன் அடிமையாக்கபட்டிருப்பான். இந்த அரசியாரின் ராஜ்யத்தில் நடிப்பிற்காகக்கூட சிரிக்க முடியாமல் அவதிப்படும் மக்களும் இருக்கத்தான் செய்தார்கள்.இந்த ராஜ்யத்தில் ஸ்ரீதேவி அரண்மனை வாசியாகவும் மூதேவி மக்களின் இல்லங்களிலும் வசித்து வந்தாள் இதனாலேயே மக்கள் நமது தேவியரை மூ தேவியார் என்று அன்போடு அழைத்தார்கள் நமது மூ தேவியாரின் திருவிளையாடல்களை தாங்க முடியாமல் சகித்து கொண்டு இருப்பவர்கள் ஏராளம் .நாட்டை விட்டு ஓடியவராகள் ஏராளம் ஏராளம் விரட்டியடிக்கப்பட்டவர்கள் ஏராளமோ ஏராளம் அரண்மனையில் சாதாரண வேலைகளுக்கு கூட ஆளில்லாமல் நல்லவர் யாரேனும் ஒருவரே பல வேலைகளை செய்வதாக இருந்தது இப்படித்தான் ஒருமுறை நமது தேவியார் நடந்து வந்துகொண்டு இருந்தார் தேவியார் அரசவைக்குள் நுழையும்பொழுது தேவியாரின் கண்களில் மிதியடி ஒன்று பட்டது மிதியடியை பார்த்த தேவியார் கொதித்து எழுந்தார் மிதியடிக்கு கீழே ஒரே ஒரு சிறுதுண்டு காகிதம் ஒன்று கண்ணில் பட்டது.மூதேவியின் கண்களுக்கு குப்பைகள்தானே தென்படும் முடிந்தது ஜோலி யார் இன்று அரசவையை சுத்தம் செய்த மடையன் என்று அனைவரின் முன்பும் அன்று சுத்தம் செய்தவனை முழுவதுமாக சுத்தம் செய்தார் நமது மூ தேவியார் . இப்படி அரண்மனையில் பணிபுரியும் பணியாளர்களை பணிசெய்யவிடாமல் தடுப்பதும் ஏன் பணி செய்யவில்லை என்று பிறகு திட்டுவதும் தனது தலையாய கடமையாக கொண்டிருந்தார் மூ தேவியார் .இப்படி இருக்க நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தம்மை மூ தேவியார் என்று அன்போடு அழைக்கும் செய்தி அரசியாரின் காதுகளுக்கு எட்டியது.இதை உணர்ந்த மக்கள் எப்படியாவது உயிரை காப்பாற்றி கொள்ள முடிவு செய்தார்கள் ஆனால் நமது தேவியார் இதை புதிய விதத்தில் கையாள நினைத்தார்.தமக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்த்து வைப்போருக்கு அரசவையில் மந்திரி பதவியுடன் இரண்டு கிராமங்களை பரிசாக அளிப்பதாக கூறினார் ..........அரசியாருக்கு சிறிய விஷயத்தில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.சந்தேகம் என்னவென்றால் உண்மையிலேயே பெரியவள் ஸ்ரீதேவியா அல்லது மூதேவியா என்பது? இதற்கு தக்க பதிலளிப்பவர்கள் கௌரவிக்க படுவார் என்று தண்டோரா போட்டனர்.உயிருக்கு பயந்து ஒருவரும் முன்வரவில்லை ஆனால் நமது மூ தேவியார் சற்று வித்தியாசமானவர் தினமும் ஒரு குடும்பத்தை அழைத்து தனது ஸந்தேஹத்தி தீர்த்து வைக்க சொல்லியும் தண்டனை அளித்தும் அதிகாரம் செலுத்தினார் .ஒருவன் அகப்பட்டான் அவனிடம் கேள்வி கேட்டாள் நமது தேவியார்.உண்மையிலேயே பெரியவள் ஸ்ரீதேவியா அல்லது மூதேவியா? அவனோ நகைத்து நகைத்துப் பின்வருவதறியாமல் மூதேவிதான் நல்லவள் என்றான்.
காரணம் என்னவென்று கேட்க , “ஸ்ரீதேவி .எங்கும் நிலயாதிருப்பதில்லை. அவள் ஒருவனைச் ஸ்ரீமானாகவும், மற்றொருவனைப் பேதையாகவும் செய்கிறாள். மூதேவியானவள் அப்படியில்லை. உலகத்திலுள்ள ஜீவராசிகள் யாவற்றிலும் வியாபகமாயிருக்கிறாள்” என்று சொல்லக்கேட்டு சினமுற்ற நமது தேவியார் அவனுக்கு சிறைத்தண்டனை வழங்கினார். இப்படி ஒவ்வொரு குடும்பமாக பாதிக்க பட்டுக்கொண்டு இருந்தது.இந்த கொடுமையிலிருந்து மக்களை காப்பற்ற மந்திரி குமாரன் ஒருவன் தேவியாரிடம் ஒரு யோசனை சொன்னான் .தேவியாரே எனக்கு தெரிந்த அறிஞர் இருக்கிறார் பார்த்தால் சற்று இளித்தவாயன் போல் இருப்பார் ஆனால் அவர் ஏதோ விஷயம் தெரிந்தவர் என்று ஒப்பு கொள்ளலாம் அவரின் பெயர் சபாபதியார் அவரை அழைத்து உங்கள் சந்தேகத்தை காட்டல் என்ன? என்று சொல்லி தேவியாரை நன்றாக மாட்டிவிட்டான் .அதுவும் சரிதான் அவரை நாளை அரசவைக்கு வரவழையுங்கள் என்றார் தேவியார் .பொழுது விடிந்தது சபாபதியாரும் வந்தார் பார்ப்பதற்கு மந்திரி குமாரன் சொன்னது போல் இளித்தவாயன் கொஞ்சம் தொப்பை உயரம் நெற்றி நிறைய விபூதியுடன் காணப்பட்டார் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.உம்மை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் தக்கப்பதில் வழங்கி பரிசை பெற்று செல்லுங்கள் என்றார் மூ தேவியார் சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டாள் நமது தேவியார்.உண்மையிலேயே பெரியவள் ஸ்ரீதேவியா அல்லது மூதேவியா? சபாபதியாருக்கு வாயில் வாஸ்து மிகவும் நன்றாக இருந்தது ,தேவியாரே இவ்வுலகில் ஸ்ரீதேவியின் வருகையைப் பற்றி
சந்தோஷிக்கிறார்கள்; மூதேவி போதலைப் பற்றிச் சந்தோஷிக்கிறார்கள், ஆகையால் இருவர் விஷயத்திலும் மக்களின் சந்தோஷம் சமமே என்றார் சபாபதியார். நமது அகிலஉலக புத்திசாலி தேவியாருக்கு சந்தோசம் .ஆனால் சபாபதியார் பிடித்தார் ஓட்டம் .....சகோதர சகோதரிகளே மூதேவி போதலை பற்றி சந்தோஷிக்கும் நாள்.....நமக்கு ஏன் மௌனமாய் இருத்தல் நன்று