Monday, December 20, 2021

 

வெட்டிப்பயல்கள்

ஒரு கிராமத்தில் ஒரு பணக்கார குடியானவன் இருந்தார்.அவருக்கு இருபுதல்வர்கள் இருந்தனர் ஒருவன் பெயர் வென்சடையன்  மற்றொருவன் பெயர் மண்சடையன்.ஆனால் இருவருக்கும் தலை முழுவழுக்கை .  அவர்கள் இருவருக்கும் ஒரு வேலையும் செய்ய தெரியாது தண்டத்தீனி தின்று வெட்டி பொழுது போக்கி வந்தார்கள்.இவர்கள் இருவரும் இப்படியே இருந்தால் இவர்களது எதிர்காலம் என்னாவது என்று யோசித்த இவரது தகப்பனார் இவரது புதல்வர்களை அழைத்து நீங்கள் இருவரும் இப்படி சும்மாவே இருந்து தண்டத்துக்கு சாப்பிட்டு வெட்டிப்பொழுது போக்குவது சரியல்ல.ஆனால் தகப்பனார் பேசும்பொழுது யோவ் பெருசு உயிர வாங்காத போயா என்று போனார்கள் சடையர்கள் .பிறகு ஒருநாள் முதல் மகனான வென்சடையனை அழைத்து நீ உன் மாமா ஊருக்கு சென்று அங்கு எல்லோரும் சுகமா என்று அறிந்து வா அந்த ஊரில் ஒரு மண்ணும் கிடையாது அதனால் அங்கேயே உட்கார்ந்திராமல் மறுநாளே திரும்பி வந்துவிடு என்றார் தகப்பனார் வென்சடையன் தனது மாமன் ஊருக்கு கிளம்பினான் போகும்பொழுது ஒரு மூட்டை நிறைய மண்ணை சுமந்து சென்றான் .அவன் தனது தாய்மாமன் ஊரை அடைந்தான் இவன் கையிலே மூட்டையோடு வருவதை பார்த்த இவரது மாமா என்னடா அது மூட்டை என்று இவனோ அப்பாதான் சொன்னார் இந்த ஊரிலே ஒரு மண்ணும் கிடையாது என்று சரி கழுதை மண்ணாவது இருக்கட்டுமே என்று ஒரு மூட்டை மண் கொண்டு  வந்தேன் . என்றான் அதை கேட்ட அவனது மாவையும் மற்றவர்களும் தங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டனர் .சடையன் ஊர் திரும்பும் பொழுது அவன் மாமா தம்பி நீ எங்க போனாலும் ஒரு கெட்டிக்காரனை துணையாக அழைத்து  போ அவனும் அப்படியே செய்வதாக கூறி தன ஊருக்கு போனான் அங்கு தன மாமன் வீட்டில் நடந்ததை எல்லாம் கூறினான் தந்தையும் சரி நீ ஒன்று செய் எங்கு சென்றாலும் தனியாக செல்லாதே என்று சொன்னார்.

பிறகு தனது இரண்டாவது மகன் வென்சடையனை அழைத்தார் .நீ நம் வயலுக்கு போய் குடிசை போட்டு அங்கேயே தங்கி இந்த வருடம் விவசாயத்தை கவனி .என்றார் அவனும் சரி என்று சொல்லிவிட்டு வயலுக்கு சென்று ஓரமாக குடிசைபோட்டு இருக்கலானான் .அந்த வருடம் காட்டில் வேர்க்கடலை போடுவதற்கு விதைக்கடலை ஓரிடத்தில் வைத்திருந்தார்கள் ஒரு வென்சடையான் பச்சை கடலையை எடுத்து தின்றான் அதை கண்ட வேலையாட்கள் ஐயா வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடாதீர்கள் வறுத்து தருகிறோம் என்று சொல்லி கொஞ்சம் கடலையை என்னிடத்து சென்று வறுத்து கொடுத்தனர் அவனும் அதை சாப்பிட்டு விட்டு வெகு ருசியாக இருப்பதை கண்டான் அவன் மனதில் ஆஹா இவர்கள் கடலையை பச்சையாகவே விதைத்து விளைவித்து மீண்டும் வறுப்பதற்கு ஒட்டுமொத்த கடலையும் வறுத்தே விதைத்துவிட்டால் வருத்தக்கடலையே விளையும் அல்லவா என்று இவனது அதீதமான மூளை கபாலத்திற்குள் இருக்க முடியாமல் காது வழியாக வெளியேறி சற்று  அசாதாரணமாக யோசித்தது.உடனே ஆட்களுக்கு கட்டளை இட்டான்  . விதையாக வைக்க பட்டிருந்த அனைத்து விதைக்கடலையும் வறுக்கும் படி சொன்னான் ஐயோ முதலாளி எல்லாம் வீணாப்போயிடும் என்றனர் வேலையாட்கள் நான் உங்கள் எஜமானன் புரிந்ததா  பேசாமல் நான் சொன்னபடி செய்யுங்கள் .எல்லாம் எனக்கு தெரியும் .என்றான் வேலையாட்கள் வேறுவழியில்லாமல் இவன் சொன்னதை செய்துவிட்டு ஓடி சென்று நடந்ததை இவன் தந்தையிடம்  சொன்னார்கள்.அவரும் தந்து மகனை வீட்டிற்கு அழைத்துக்கொண்டுவிட்டார் விதைக்க வேறு விதைக்கடலை வாங்கித்தந்தார் .தந்தைக்கு நாளுக்கு நாள்கவலை அதிகரித்த அதிகரித்தது .இறுதியாக இறுதியாக ஓர் முறை முயற்சி செய்து பார்ப்போம் என்று யோசித்து விஷபரீக்ஷையில் இறங்கினார் .சடையர்கள் இருவரையும் அழைத்து உங்கள் இருவருக்கும் ஒரு பொறுப்பு தருகிறேன் பெரிதாக ஒன்றும் அல்ல நீங்கள் இருவரும் சென்று நமது மாட்டுப்பட்டியை நன்கு கவனித்து கொள்ளுங்கள் அங்கு இருக்கும் எருமை பசுமாடு முதலியவற்றின் பாலை கறந்து விற்று பனைக்கு அனுப்புங்கள் இருவரும் மாட்டுப்பட்டிக்குள் புகுந்தனர் பாவம் பசுக்கள் எந்த ஜென்மத்தில்  யாருக்கு என்ன தீங்கு செய்ததோ .இவர்கள் இருவரும் சில நாட்கள் வழக்கத்தை அனுசரித்தனர்  ஒருவன் இருந்தால் விஷேஷம் இருவரும் சேர்ந்து விட்டனர் ரொம்ப விஷேஷம் சில நாட்களுக்கு பின்னர்இவர்கள் இருவர் மூளையிலும் தீடிரென்று ஓர் அற்புத வெளிச்சம் பசுக்கள் கொஞ்சம் பால்தான் கறக்கின்றது.பாலை தினமும் கறக்காமல் ஒரு 20 நாட்களுக்கு பின்னர் கறந்தால் நிறைய பால் கிடக்கும் அல்லவா என்று யோசித்த வழுக்கை சடையர்கள் வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினார் பொங்கலுக்கு ஒரு மாத்திற்கு முன்னரே பால் கறப்பதை நிறுத்தி விட்டனர்வேலையாட்கள் என்ன செய்வார்கள் பாவம் பால் கறப்பதை நிறுத்தி விட்டனர் .பொங்கலுக்கு முதல் நாள் பால் கறக்க உத்தரவிட்டார்கள் வழுக்கை சடையர்கள், முடிந்தது ஜோலி ஒருமாடும் ஒரு சொட்டு பால் கூட கறக்கவில்லை நீண்டநாட்கள் பால் கறக்காமல் இருந்ததால் மாட்டின் மாடி எல்லாம் வற்றி போய்விட்டது வேலையாட்கள் அனைவரும் சென்று சடையர்களின் தந்தையிடம் நடந்த அனைத்தையும் சொன்னார்கள் அவர் தலையில் அடித்து கொண்டார்

No comments:

Post a Comment

  அபராஜிதா-part-6 அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக...