சபாபதியாரின் கதைப்பகுதிக்கு வருக வருகவே இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல வாங்க கதையை பார்ப்போம்.
கதையின் பெயர் :
மு(ம)ந்திரி என்கின்ற புல்லாங்குழல் மார்த்தாண்டன்
ஹிரன்யகஸ்ருங்கம் எனும் இயற்கைவளங்கள் கொண்ட அற்புத ராஜ்ஜியம்.இந்த ராஜ்யத்தை
பூபேந்திரன் எனும் மன்னன் ஆண்டு வந்தான்.ஓர் அரசனுக்கு இருக்க வேண்டிய அனைத்து லக்ஷணங்களும்
இவனிடம் இருந்தது.இவனது ராஜ்யத்தில் மக்கள் சுகவாசிகளாக இருந்தனர். பிறந்த
ஊரை விட ஸ்வர்கம் ஏது? ஸ்வர்கம் என்பது இப்படித்தான் இருக்கும் என்று மக்களின் நம்பிக்கை
ஏனென்றால் அரசன் ராஜ்யத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் கண் போன்று காத்து வந்தான். இப்படி
இருக்க ராஜ்யம் என்று இருந்தால்
மந்திரி என்று ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா! மந்திரி
சோமசேகரவர்மன் என்பவர்தான் செவ்வனே மந்திரிப்பதவியை அலங்கரித்து வந்தார் ஆனால் அண்டைய
நாட்டிற்கு செல்லும் பொழுது மலையிலிருந்து உருண்டு விழுந்து இறந்துபோனார் நல்லோர்களுக்கு
ஏன் இப்படி ஒரு நிலைமை என்று மன்னன் பூபேந்திரன் மந்திரிப்பதவியை அலங்கரிக்க புதிதாக
ஒருவரை நியமித்தார். இந்த மந்திரியின் பெயர் புல்லாங்குழல் மார்த்தாண்டன். ஒரு (மு)மந்திரிக்கு
என்னென்ன துர்குணங்கள் இருக்க கூடாதோ அனைத்து துர்குணங்களும் இவரிடத்தில் செவ்வனே குடிகொண்டு
இருந்தது..இந்த மந்திரியின் பெயர் புல்லாங்குழல் மார்த்தாண்டன் மந்திரியின் நரித்தனம்
மன்னனுக்கு தெரியாது. சிறிய பொருட்கள் வாசனை திரவியங்கள் விற்க அரணமனைக்கு
சென்று முகஸ்துதி பாடி எப்படியோ ஓர் பதவியை பிடித்தான்.பின்னும் ராஜாவிற்கு விசுவாசியாக
இருப்பது போன்று நடித்து மந்திரி பதவியையும் பெற்றான் .இப்படிப்பட்ட ஒரு மந்திரியை
வைத்து கொண்டு ராஜ்யத்தை செழிப்பாக நடத்திகொண்டு இருந்தார் பூபேந்திரமன்னன்.
மந்திரியோ கள்ளத்தனமான சிரிப்பு,வேகமான நடை,
சப்பைமூக்கு சாலவாயன், சட்டிமண்டை ,சுமாரான தொப்பை
என்று ஒரு திருடனுக்கு தேவையான அனைத்து சாமுத்ரிகா
லக்ஷணமும் நமது புல்லாங்குழலிடம் பொருந்தியிருந்தது.
மக்களின் நலம்விரும்புபவன் அரசன் அதை தனக்கு சாதகமாக்கி
கொள்பவன் நமது புல்லாங்குழல் என்று இந்த ராஜ்ஜியம் கோணலாக அல்லாமல் நேர்கோணலாக இருந்தது.மன்னனுக்கு
முன் மக்கள் சந்தோஷமாக இருப்பது போல் நன்கு நடித்து வந்தனர் . நாளாக நாளாக அரண்மையில் இருக்கும் முக்யஸ்தர்கள்,ராஜ்யத்தில்
இருக்கும் மக்கள் அனைவரும் மன்னனின் முகத்தை மறந்தே போனார்கள். புல்லாங்குழலுக்கு மீறி ராஜ்யத்தில் ஒரு துரும்புகூட அசையாது
என்று ஆயிற்று.இப்படி இருக்க மன்னனுக்கு ஓர் அழகிய குழந்தை இருந்தது.அந்த குழந்தையை
குருகுலவாசத்திற்கு சேர்க்க முடிவுகட்டினார் மன்னன் .சொல்லி வைத்தாற்போல் நமது புல்லாங்குழலுக்கும்
ஒரு மகன் இருந்தான் அவனையும் குருகுலவாசத்தில் சேர்க்க முடிவு காட்டினார்கள்.மன்னன்
சரியான தேதியில் தனது புதல்வனை அழைத்து கொண்டு குருகுலத்திற்கு சென்று குருகுலத்தில்
இருக்கும் ஆச்சார்யர்களுக்கு தக்க மரியாதை செய்து கெளரவித்து தனது மகனை குருகுலவாசத்தில்
சேர்த்து வந்தான்.ஆனால் நமது புல்லாங்குழல் கொஞ்சம் வித்தியாசமாகவே சிந்தித்தான் குருகுலத்தை
தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டான்.
குருகுலத்தில் இருக்கும் ஆச்சார்யர்களையே தனது இஷ்டப்படி
ஆட்டிவைத்தான்.ஏனென்றால் தனது மகன் கல்வி பயிலக்கூடிய இடம் தன் மகனின் இஷ்டப்படி இருக்கவேண்டும்
என்றும் வசதியாகவும் இருக்கவேண்டும் என்றும் எதிர்ப்பார்த்தான்.இதற்க்கு முன்பு ராஜ்யத்தில்
இருக்கும் குருகுலத்தில் எத்தனை சிஷ்யர்கள் இருக்கின்றனர் என்று தான் பார்த்தானே தவிர
அங்கு இருக்கும் அடிப்படை வசதிகள் என்ன யார் எப்படி இருக்கின்றனர் அவர்கள் கருப்பா
வெளுப்பா என்று கூட பார்த்தது கிடையாது தனது மகனுக்கு என்று வந்த உடன் மகனை குருகுலத்திற்கு
அனுப்பாமல் குருகுலத்தை தனது இல்லத்திற்கு மாற்றினான் தினமும் ஆச்சார்யர் தனது இல்லத்திற்கு
வந்து தனது மகனுக்கு வித்யாபியாசம் செய்வித்து செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான்.
தன் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செயகிறான் என்று மன்னனுக்கு தெரியாது பாவம் அரசன் வெளுத்தது
எல்லாம் பால் தானே என்று நினைத்தான் இப்படி சென்றது அர்சனனின் மகனுக்கு இல்லாத முக்கியத்துவம்
கேவலம் மந்திரியின் மகனுக்கு எதற்கு என்று ஒரு கேள்வி எழுந்தது.உடனே அனைத்து ஆச்சார்யர்களையும்
தன் இல்லத்திற்கு அழைத்து அச்சுஅசலாக போலி போல் நடித்து அனைவரையும் கெளரவிப்பதுபோல்
நடித்தான் ஆச்சார்யர்களே அனைவரும் சந்தோஷமாக இருங்கள் உங்கள் கண்ணில் கண்ணீர் வந்தால்
நாங்கள் எங்கள் கையை வெட்டிக்கொளவதற்கு சமம் என்று போலி வார்த்தைகள் பேசி ஆச்சார்யர்களை
சமாதானப்படுத்தினான். அரசனின் மகன் குருகுலத்தில் மற்ற மாணவர்களுடன் கல்வியை
சரிவர பயின்று வந்தான்.மந்திரியின் மகனோ சற்று அலக்ஷியமாக நடந்துகொண்டான் காரணம் வளர்ப்பு.
மந்திரியின் உண்மை முகம் மன்னனுக்கு தெரியப்படுத்த
வேண்டும் என்று மக்கள் பலர் பலமுறை செய்து பயனற்று போனது .ஆண்டுகள் பல சென்றன மிஞ்சிய
சில கெளரவத்துடன் ஆச்சார்யர்கள் எப்படியோ வித்யாபியாசத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்
மந்திரியின் மகனுக்கு அப்யாஸம் பூர்த்தியானது அரசனின் மகனுக்கு சற்றுகாலதாமதமாகவே ஆனது
.வித்யாபியாசம் பூர்த்தியாகி விட்டால் அவர்கள் கற்றுக்கொண்டதை அரசன் நாட்டுமக்கள் அனைவரின்
முன்பும் பரீக்ஷை செய்துபார்பது வழக்கம் பரீக்ஷை தேதி அறிவிக்கப்பட்டது. ராஜதர்பாரில் மக்கள் மந்திரிகள் அரசன் அரசனின் மகன் புல்லாங்குழலின்
மகன் மற்ற சிஷ்யர்கள் அனைவரும் இருந்தனர் பரீக்ஷை ஆர்மபித்தது முதலில் வாக்பரீக்ஷை
நடைபெற்றது மன்னனே நேரடியாக கேள்விகள் கேட்டான் மன்னனின் கேள்விகளுக்கு அரசகுமாரன்
மற்ற சிஷ்யர்கள் பதில் சொன்னார்களே தவிர மந்திரியின் மகனால் சரிவர பதிலளிக்க முடியவில்லை
நமது புல்லாங்குழல் மந்திரிக்கு முகம் மாறியது பிறகு ஷஸ்த்ர பரீக்ஷை இதில் அரசனின் மகன் முதன்மை வகித்தான் மற்ற சிஷ்யர்களும்
எப்படியோ தேர்ச்சிபெற்றனர் மந்திரிமகனின் சுற்று எப்படியேனும் தேர்ச்சிபெறவேண்டும்
என்ற வேகம் அவனுக்குள் இருந்தது ஆனால் வித்தைகளை சரிவர நினைவில் வைத்துக்கொள்ளமுடியாமல்
திணறினான் அரசனுக்கு லேசாக ஆச்சார்யர்களின் சந்தேகம் எழுந்தது ஆச்சார்யர்களை அழைத்து
கேட்டபோது அனைவருக்கும் எப்பைடயோ அப்படித்தான் இவனுக்கும் கற்றுத்தந்தோம் மன்னா என்றனர்
ஆச்சார்யர்கள் இல்லையே மன்னனின் மகன் என்பதனால் என் மகனுக்கு முக்கியத்துவம் அளித்தீர்கள்
இவனுக்கு எதுவுமே சொல்லித்தராமல் விட்டாற்போல் தெரிகின்றது என்றார் அரசன் அப்படியானால்
மற்ற சிஷ்யர்களும் அல்லவா தோல்வியை தழுவியிருக்க வேண்டும் மன்னா என்றனர் ஆச்சார்யபெருமக்கள்
அது மன்னனுக்கு சரி என்றே பட்டது இப்பொழுது மந்திரி முந்திக்கொண்டான் இல்லை மன்னா இவர்கள்
பொய்யுரைக்கின்றனர்.என் மகனை த்வேஷித்தார்களே தவிர அவனுக்கு கடுகளவும் கற்று தரவில்லை
என்று வாதிட்டார் புல்லாங்குழல் ஆச்சார்யர்கள்
மற்றும் மந்திரி இருவரும் பேசுகையில் ஒரு சிஷ்யனின் வாழ்க்கையை பாழாக்கிய வேகம் ஆச்சார்யர்களின்
பேச்சில் த்வனித்தது மந்திரி மகனின் கண்களிலிருந்து
கண்ணீர் வெள்ளம் .மந்திரி அதனை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முயற்சித்தான் அரசன் மந்திரி
மகனை அழைத்து குழந்தாய் மற்ற மாணவர்களை போல் ஏன் நீ அப்யாசம் செய்யவில்லை.ஒரு பரீக்ஷையிலும்
தேர்ச்சி பெறவிலையே ஏன் என்று அரசன் கேட்ட பொழுது தன் மகன் தனக்கு சாதகமாக பேசுவான்
என்று நினைத்தான் புல்லாங்குழல் ஆனால் மந்திரி மகனோ தனது இந்த நிலைமைக்கு காரணம் தன்
தந்தையென்று தான் வித்யாபியாசம் செய்த் முறையை ஒன்றுவிடாமல் கண்ணீருடன் சொன்னான் மந்த்ரிர்யின்
மகன் தன்னை தன் தந்தை முட்டாளாக்கி விட்டார் என்ற மகனுக்கு மகனின் வாழ்க்கையை இப்படி
பாழாக்கி விட்டாயே என்றார் அரசன் பின்புதான் மக்களும் மற்றைய அரண்மனை வாசிகளும் மந்திரியை
பற்றி ஒன்றிவிடாமல் சொன்னார்கள் தன்னை மட்டும் அல்லாமல் தன்னை நம்பியிருந்த அனைவரையும்
ஏமாற்றிய பாவத்திற்கு மந்திரி புல்லாங்குழலுக்கு ராஜ்யத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்
அரசர் தன் மனைவிமக்களுடன் வெளியேறுகையில் கேவலம் போலி கெளரவத்திற்காக தவறு செய்துவிட்டோம்
தன் மகனின் வாழ்க்கையும் பாழாகி விட்டதே என்று நொந்து உயிரை விட்டான் மந்திரி புல்லாங்குழல்
மார்த்தாண்டன்.
சகோதர சகோதரிகளே
விதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும்,
மதிகெட்டோருக்கு புல்லாங்குழலின்……….இதற்கு நான்
சொல்லவா வேண்டும்
No comments:
Post a Comment