Thursday, December 23, 2021

 

சபாபதியாரின் கதைப்பகுதிக்கு வருக வருகவே இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல வாங்க கதையை பார்ப்போம்.கதையின் பெயர் சாம்பார் 

மல்லேஷப்பட்டினம்  என்னும் ஊரில், சாம்பார் சக்கட்டி என்பவன்வாழ்ந்து வந்தான். அவனுக்கு பலசரக்கு கடையும்,
நில புலன்களும் சொந்தமாக இருந்தன. போதுமான
வருமானம் கிடைத்தாலும், மிகவும் கஞ்சனாக இருந்தான்.
அவனுடைய பலசரக்கு கடையிலுள்ள அரிசி, பருப்பு
மூட்டைகளை, எலிகள் கடித்துக் குதறி ஓட்டை போட்டு தின்று
வந்தன.
சாம்பார் சக்கட்டிக்கு வயிறு எரிந்தது. 'வாயைக் கட்டி, வயிற்றைகட்டி சேர்க்கும் சொத்துக்களை எல்லாம் எலிகளே தின்று நாசமாக்கி விடுகிறதே...' என்று மிகவும் வருந்தினான்.
எலிகளைப் பார்க்கும் போதெல்லாம் அவற்றை அடிக்க,
ஒரு குச்சியை தூக்கியபடி ஓடுவான். அந்த எலிகளோ,
மூட்டைகளின் மேலும், கீழும் எகிறிக் குதித்து வளைகளுக்குள்
புகுந்து, வேடிக்கை காட்டி வந்தன. போதாதென்று தனது பணியாட்கள் இருவரை எலியை அடிப்பதற்காக ஒரு நாள் முழுவதும் ஒய்வு இன்றி காவல் வைத்தான்.
வேலையாட்களுக்கு தக்க கூலியும் அளிக்காமல் ஓய்வும் அளிக்காமல் அவர்களை நிற்க வைத்து வேலைவாங்கினான் அவ்வப்போது எலி அடிக்ககூட துப்பு இல்ல என்று கண்டபடி திட்டி தீர்ப்பான்.ஆசை வார்த்தை பேசி வேலை வாங்குவது பின்பு திட்டுவது இதுதான் நமது சாம்பார் சக்கட்டியின் அற்புதமான அதிசயமிக்க குணம் 
நாளுக்கு நாள் எலிகளின் குடும்பம் பெருகி வளர்ந்தன.
கருமி சாம்பார்சக்கட்டிக்கோ எலிகளை ஒழிக்க, என்ன செய்வதென்றேபுரியவில்லை.நண்பர்களிடம், ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினான். அந்த கூட்டத்தில்
நண்பர்களே  ஒரு எலி என்பது ஒரு விலங்கு என்று ஆரம்பித்து சுமார் ஒரு 2.30 மணிநேரம் சோழற்பொழிவு ஆற்று  ஆற்று என்று ஆற்றினான். ஆகவே ''எலித்தொல்லையில் இருந்து விடுபட ஏதாவது
வழி இருக்கிறதா?'' என்று கலந்து
ஆலோசித்து சொல்லுங்கள் நாம் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் நமது ஆலோசனை கூட்டத்தை தொடரலாம் என்று தேநீர் அருந்திவிட்டு மீண்டும் கூட்டத்தை தொடரும்பொழுது
ஒரு நண்பன் ஒருவன்
''எலிப்பொறி வாங்கி, அதில் ஒரு தேங்காய்த் துண்டை மாட்டி
வைத்தால், அதைத் தின்பதற்காக உள்ளே நுழையும் எலி மாட்டிக்கொள்ளும்...'' என்று கூறினான்.
''நல்லா இருக்குடா உன் யோசனை. காசு கொடுத்து எலிப்பொறி
வாங்கணும்; அப்புறம் தேங்காயை வேறு வாங்கி வைத்து
வீணாக்கணும்; எத்தனை தண்டச் செலவு. எலிகளால் வீணாவது
போதாதென்று, எலிகளை பிடிப்பதுக்கு வீண் செலவு செய்யணுமா,''என்று சலித்துக் கொண்டான் சாம்பார்சக்கட்டி.
''அதானே! எலிகளைப் பிடிக்க, செலவே இல்லாத வழி இருக்கிற
போது, தண்டச் செலவு ஏன் செய்யணும்,'' என்றான் சாம்பார் சக்கட்டியின் சங்கத்தை சேர்ந்த நண்ப(பி)ர்.
''செலவில்லாத வழி இருக்கா... என்ன வழி சொல்லு,'' என்று
ஆர்வத்தோடு கேட்டான் சாம்பார் சக்கட்டி.

''உன் கடையில ஒரு பூனையை வளர்த்தால் போதுமே...
அது எலிகளைப் பிடிச்சுடுமே,'' என்றான்.

''பூனையை வளர்க்கிறதா... பூனைக்கு வேறு சாப்பாடு போடணுமே,''
என்று கவலையோடு சொன்னான் சாம்பார் சக்கட்டி.

''அதுதான் இல்லை... பூனைக்குப் பசிக்கும் போதெல்லாம்,
ஒவ்வொரு எலியாக பிடித்துத் தின்று கொள்ளும்,'' என்றான்
சங்கத்தை சேர்ந்த நண்ப(பி)ர்.

மறுநாளே வீடு வீடாகப் போய், பூனையை தானம் கேட்டான்
சாம்பார் சக்கட்டி.

ஒரு வீட்டுக்காரர், போனால் போகிறது... என்று ஒரு பூனைக்
குட்டியை சாம்பார் சக்கட்டியிடம் கொடுத்தார்.

அதை வாங்கி வந்து, கடைக்குள் விட்டான் சாம்பார் சக்கட்டி. அந்தபூனையும், எலிகளை விரட்டி பிடித்துத்தின்று வாழ்ந்து வந்தது.

ஒருநாள்-
சாம்பார் சக்கட்டி குடிப்பதற்காக, ஒரு செம்பில் பால் கொடுத்தாள்மனைவி. அப்போது, கடையில் சிறிது கூட்டம் இருந்ததால்,பக்கத்தில் வைத்து விட்டு வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான்
சாம்பார் சக்கட்டி.

கூட்டம் குறைந்ததும், பாலைக் குடிக்கலாம்... என்று திரும்பிப்
பார்த்த சாம்பார் சக்கட்டி அதிர்ச்சியடைந்தான்.
பாலை, குடித்துக் கொண்டிருந்தது பூனை.
'அட திருட்டுப் பூனையே! உன்னை எலிகளைப் பிடித்து வாழச்
சொன்னால், நீ எனக்கு வைத்த பாலையே குடிக்கிறாயா... உன்னை
என்ன செய்கிறேன் பார்...' என்று கூறி, எலிகளை அடிப்பதற்காக
வைத்திருந்த கம்பை எடுத்து, பூனையின் தலையில் ஒரே போடாகப்
போட்டான்.

அந்த அடி பூனையின் தலையில் பலமாக விழ, 'மியாவ்' என்ற
அலறலோடு அந்த இடத்திலேயே இறந்தது.

அதைப் பார்த்த ஒருவர், ''ஐயோ என்ன காரியம் செய்து விட்டாய்
சாம்பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பூனையைக் கொல்வது பெரிய பாவமாயிற்றே.
இதற்கு, உடனே பரிகாரம் செய்துவிடு. இல்லாவிட்டால், இந்தப் பாவம்,
உன்னை, உன் பரம்பரையையும் விட்டு வைக்காது,'' என்றார்.

அதைக் கேட்டுப் பயந்த சாம்பார் சக்கட்டி, உடனடியாக கடையைப்
பூட்டிவிட்டு, பரிகாரம் செய்பவரைத் தேடி சென்றான்.

உள்ளூர்காரனான பரிகாரி,
வேறு யாரும் அல்ல நமது சபாபதியார்தான் அவனுடைய கஞ்சத்தனத்தை
நன்கு அறிந்தவர். அதனால், சாவகாசமாக தன்
வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, வந்த காரியம் என்ன
என்று சாம்பார் சக்கட்டியை விசாரித்தார்.

''சாமி! நான் ஒரு பூனையை அடித்துக் கொன்று விட்டேன்.
அது பெரிய பாவமாமே! அதற்கு நீங்கள் தான் வந்து ஏதாவது
பரிகாரம் செய்ய வேண்டும்!'' என்றான்.

சாம்பார் சக்கட்டிக்கு நன்றாகப் பாடம் புகட்ட விரும்பிய நமது சபாபதியார்,
''அடேடே பூனையைக் கொன்றவனுக்கு நரகம் அல்லவா
கிடைக்கும். நீ பூனையை ஏன் கொன்றாய்... எப்படிக் கொன்றாய்?''
என்று கேட்டார்.

''ஒரு பெரிய கம்பால் அடித்துக் கொன்றேன் சாமி!'' என்றான்.

''அப்படியானால், அதே கம்பால் உன் தலையிலும் ஓங்கி அடி
கொடுப்பது தான் இதற்கு பரிகாரம். நீ போய் அந்தக் கம்பை
எடுத்து வா,'' என்று  கூறினார்.

''ஐயோ சாமி! நானும் செத்துப் போய் விடுவேனே...''
என்று அலறினான் சாம்பார் சக்கட்டி.

''அதனால் என்ன... உன் பாவம் போய்விடுமே. நீ நேராக
சொர்க்கத்திற்கே போய் விடலாம்,'' என்று மேலும் அவனைச்
சீண்டினார்.

''வேண்டாம் சாமி. நான் இப்போதே சொர்க்கத்திற்கு போக
விரும்பவில்லை. தயவு செய்து வேறு பரிகாரம் ஏதாவது
இருந்தால் பார்த்துச் சொல்லுங்கள்,'' என்றான் சாம்பார் சக்கட்டி.

''சரி! இன்னொரு பரிகாரம் இருக்கிறது. சுத்தமான தங்கத்தில்
பூனை உருவத்தை செய்து எவருக்கேனும் தானமாகக்
கொடுத்தால், பூனையைக் கொன்ற பாவம் தீர்த்துவிடும்!''
என்றார்.

சாம்பார் சக்கட்டியும் மனம் வருந்தியபடியே, தன் கஞ்சத்தனத்துக்கு
இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! என்று எண்ணியபடி
தங்கத்தில் பூனை செய்து, அவருக்கே தானமாக கொடுத்தான்.

சகோதர சகோதரிகளே , 

சரியான தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளாத தொண்டன்,

நியாயமான சந்தர்ப்பங்களை இழந்து விடுகிறான். சரியான

தொண்டனை அடையாளம் கண்டு கொள்ளாத தலைவன், இன்று நான் மௌன விரதம்  ... சரியா

No comments:

Post a Comment

  அபராஜிதா-part-6 அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக...