Sunday, March 20, 2022

 

அபராஜிதா-part-6

அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக்க ஆடி அசைந்து கொண்டு போனை எடுத்தாள் சுவதனாவின் அம்மா

ஹரி ஓம் யவரு, எமி காவாலி ........

ஹலோ.. காவாலி! இல்லம்மா வடபழனி ஏட்டு பரமபதம் பேசுறேன். உங்க பொண்ணுதானே சுவதனா

ஆமாம் ஆமாம் என்ன ஆச்சு?…. எங்க இருக்கா?….. என்ன தப்பு பண்ணினா?

எமண்டி துரக ரண்டி யவரோ போலீஸ் மாட்லாடுதுன்னாரு ( எங்க சீக்கிரம் வாங்க போலீஸ் பேசுறாரு ) என்று கைபேசியை சுவதனாவின் தந்தை பெற்றுக்கொண்டு பேசினார்..

ஹரி ஓம் சார் என்ன ஆச்சு சார்? எங்கிருந்து பேசறீங்க? ஏன் பொண்ணு என்ன தப்பு பண்ணினா?

 சார் போன் எடுத்தா நீங்க மட்டும் பேசுனா போருமா? அடுத்தவன் பேசவேனான். உங்க பொண்ணு சுவதனாவை வடபழனி விஜயா ஹாஸ்பிடல்ல சேத்துருக்கோம்  சீக்கிரம் வாங்க சார் ..

ஐயோ என்ன ஆச்சு என் பொண்ணுக்கு?

யோவ் நேர்ல வாயா!......... என்று கைபேசியை துண்டித்தார் போலீஸ் அதிகாரி.இருவருக்கும் பதட்டம். சுவதனாவின் தாய்க்கு ரத்தம் சர்க்கரையுடன் சேர்ந்து கொதித்தது. சுவதனாவின் தாய் அழுதே விட்டாள்.

ஆனால் தந்தையார் சற்று தைரியத்துடன் அழக்கூடாது… அழக்கூடாது… அழக்கூடாது என்றே தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.மதராஸ் நெரிசலில் எப்படியோ ஒருவழியாக மருத்துவமனையை அடைந்தனர். சுவதனாவின் தாய் தந்தையர் இருவரும் மருத்துவமனைக்கு உள்ளே நுழைந்தவுடன் ஒரு நபர் கண்ணில் பட்டார் அவரை பார்த்தவுடன் தெரிந்தது அவர் போலீஸ் அதிகாரியென்று.ஏனென்றால் அவர் செங்கல்பட்டில் நின்றிருந்தார்  அவரது தொந்தி தாம்பரத்தில் இருந்தது. நீங்கதான் சுவதனாவின் அம்மா அப்பாவா .....ஆமாம் சார் நல்லது வாங்க சார் என் பொண்ணுக்கு என்ன ஆச்சு சார்.உள்ளே சென்று லிப்ட் மூலம் இரண்டாவது மாடியை அடைந்தனர் வார்டு என் 32 உள்ளே சென்றால் அப்பொழுதுதான் ஒரு மருத்துவர் இரண்டு நர்ஸ் மேலும் ஒரு பெண் காவலாளி அனைவரும் இருக்க சுவதனாவிற்கு Trips….ஏறி கொண்டிருந்தது. சுவதனாவின் தந்தை தன்னையும் மீறி அழத்தொடங்கினார்

என்ன ஆச்சு என் பொண்ணுக்கு யாராவது சொல்லுங்க சார் என்று கேட்கவே

சார் உங்க பொண்ணுக்கு ஒண்ணுமில்ல சார் இவங்க ஒரு கொலை பார்த்து…………… 

என்னது கொலையா……

யம்மா எங்களை பேசவிடுங்கம்மா பயத்துல மயக்கம் போட்ருக்காங்க.. என்றார் ஏட்டு…..  

ஒண்ணுமில்லங்க உங்க பொண்ணு எப்பவும்போலத்தான் இருக்காங்க கொஞ்சம் ஜ்வரம் இருக்கு ஊசி போட்ருக்கோம் சரியா போய்டும் இன்னிக்கு சாயங்காலம் நீங்க உங்க பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு போங்க… என்றாள் நர்ஸ்…….

அவளது அம்மா வழக்கம் போல் புலம்ப தொடங்கினாள்.....

நான் அப்போவே சொன்னேன் இந்த பாழா போன ஆர்கியாலஜி மண்ணாங்கட்டியெல்லாம் ஒத்துன்னு வின்னாவா நா மாட. இப்புடு சூடு

ஏய் வாய மூடு குழந்தை பாவம் ஏற்கனவே பயந்துபோயிருக்கா

சுவதனாவின் தந்தை மெல்லிய குரலில்…. சுவதனா ஒன்னும் பிரச்சனை இல்லையேம்மா.

 ஒன்னும் இல்லப்பா…… என்றாள் சுவதனா

நேரம் சரியாக மாலை 6.00 ஐ எட்டியிருந்தது மேலும் அங்கு வந்த ஒரு நர்ஸ் சார் இந்த பணத்தை கட்டிடுங்க சார் என்றாள் இந்தாங்கஉங்க பொண்ணோட Discharge Report என்றாள் அந்த நர்ஸ்…

சுவதனாவின் தந்தை பணத்தை கட்டுவதற்காக சென்றார்… செல்வதற்கு முன்…. ஏய் குழந்தையை திட்டாத பார்த்து கூட்டிட்டு வா என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றார்.

சுவதனாவின் தாய் படபடவென்று பேசுவாள் ஆனால் மிகவும் பயந்தவள் கீழே இருவரும் lift மூலம் சென்று கீழ்தளத்தை அடைந்தார்கள். பணம் கட்டிவிட்டு வருகிறேன் என்று சொன்ன தன் தந்தை பணம் கட்டும் வரிசையில்  இல்லை. அந்த மருத்துவமனைக்கு பணம் கட்டும் இடம் இது மட்டும்தான். அங்கு தனது தந்தை இல்லாததை கண்டு சுவதனாவிற்கு சற்று சலனம் ஏற்பட்டது. அம்மா கொஞ்சம் இரும்மா என்று சொல்லி தனது தாயை ஒரு இடத்தில் அமர்த்திவிட்டு  அங்கு  சென்று  சுற்று முற்றும் தேடி பார்த்தாள் சுவதனா, தன் தந்தை காணவில்லை .

ஒரு நிமிடம் சுதாரித்தவள் அம்மா என்று திரும்பினாள் அமர்த்திவைக்கப்பட்ட இடத்தில் அவளது தாயும் இல்லை . மருத்துவமனை பல மனித நடமாட்டத்திற்கு நடுவில், தனது தாய் தந்தை இருவரும் காணப்படவில்லை.

 சுவதனாவிற்கு பயம் இல்லை. மருத்துவமனை சுற்றி அனைத்து இடத்திலும் தேடி பார்த்தாள் சுவதனா.  அப்படி யாருமே இங்க வர்லையேம்மா என்றுதான் சொன்னார்கள்.

 ஒரு நர்ஸ் மெதுவாக சுவதனாவின் அருகில் வந்து, உங்க அம்மா அப்பாவை தேடறீங்களா அவங்க டாக்டர்கிட்ட இருக்காங்க.  உங்கள டாக்டர் கூப்படறாரு மேடம் என்று சொல்லி அழைத்து சென்றாள் அந்த நர்ஸ்………………….

 ஒரு சிறு விளக்கு டாக்டர் முகம் சரியாக தெரியவில்லை. அங்கு அவளின் தாய் தந்தை இருவரும் காணவில்லை.

 என்னோட அம்மா அப்பா என்றாள் சுவதனா 

உக்காருங்க சுவதனா இப்போ உங்க உடம்பு எப்படி இருக்கு என்று சாதாரணமாக பேசினான் அந்த மருத்துவன்.

  I am all  right docter என்றாள் சுவதனா.

 அதே மாதிரி உங்க அம்மா அப்பா ரெண்டு பெரும் நல்லாயிருக்கணும் என்றான் மருத்துவன்.

யார் நீங்க உங்களுக்கெல்லாம் என்ன வேணும் என்று கத்தினாள். சுவதனா.

அட கோவம் வேற வருதே உங்களுக்கு என்றான் மருத்துவன்

. ஓஜா சார் சொன்னா மாதிரி கேளுங்க. உனக்கும் உங்க அம்மா அப்பாவுக்கும் ஒன்னும் ஆகாது.இப்போ எங்கள பத்தின விவரம் முக்கியமா, இல்ல உங்க அம்மா அப்பா உயிர்  முக்கியமா என்று கேட்டான் அந்த மருத்துவன்.

சுவதனாவிற்கு லேசாக கண்களில் இருந்து கண்ணீர் ஆனால் தைரியத்தை விடவில்லை. அட அழாதீங்க சுவதனா ஓஜா சார் சொல்ற மாதிரி செய்ங்க. உங்க குடும்பத்துக்கு ஒன்னும் ஆகாது. சரியா!

 யார் அந்த ஓஜா என்றாள் சுவதனா. சொல்றோம். இனிமே எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு தான் ஆகணும்.

 இப்போ உங்களுக்கு முதல் வேலை வெளியில் ஒரு சின்ன van நிக்கும் அத எடுத்துக்கிட்டு இந்த தெருமுனைக்கு போனால் அங்க சின்ன கோடௌன்.அங்க ஒரு ஆளு உன்னோட vanல ஒரு சில  ice container ஏத்தி விடுவான். அந்த வண்டிய பத்திரமா கொண்டு போய் அவன் சொல்ற இடத்துல சேத்துடுங்க. உங்க அம்மா அப்பா பத்திரமா வந்திடுவாங்க.

 

எங்க அம்மா அப்பா எங்க என்று விடாமல் கேட்டாள் சுவதனா.

அட நான்தான் சொல்றேன்ல அவங்க பத்திரமா இருக்காங்க சுவதனா. சொல்றத செய்ங்க.

வாங்க போலாம் என்று அந்த நர்ஸ் சுவதனாவை இழுத்து சென்றாள் இழுத்து சென்று அந்த van-ல் விட்டாள்.  செல்வதற்கு முன் அந்த நர்ஸ் சுவதனாவை பார்த்து நீங்க எங்கயும் தப்பு பண்ணாதீங்க அவங்க சொல்ரத மட்டும் பண்ணுங்க என்றாள்.

சுவதனாவின் கண்களில் இருந்து கண்ணீர் நதி அழுதுகொண்டே வண்டியை செலுத்தினாள். தாய் தந்தையின் முகம் வந்து வந்து சென்றது அந்த மருத்துவன் சொன்ன இடம்.

 சொன்னது போல் 5 நிமிடங்கள்தான் அந்த ஆள் அனைத்து conatinerகளையும் ஏத்தி விட்டான். ஒரு விலாசமும் கொடுத்தான் சுவதனாவின் பயணம் ஆரம்பம் ஆனது .செல்வதற்கு முன் அந்த நர்ஸ் சொன்ன அதே வசனம் சொன்னான் இந்த ஆள்.  சுவதனா  நீங்க எங்கயும் தப்பு பண்ணாதீங்க சொல்ரத மட்டும் பண்ணுங்க.

அதே அழுகை தாய் தந்தையின் முகம் ,வண்டியை செலுத்தினாள் சுவதனா.......

சொன்ன இடம் வந்தது. வண்டியை விட்டு இறங்கிய உடனேயே சொன்ன மாதிரி செஞ்சதுக்கு நன்றி.

 ஓஜா சார் உங்களுக்காக காத்துக்கிட்டுருக்காரு போய் பாருங்க என்று சொன்னதுதான் தாமதம் துப்பாக்கி முனையில் சுவதனாவை ஒரு பெண் அழைத்து சென்று கண்ணாடி அறையில்  அமர வைத்தாள்.

இப்பொழுதும் அவளுக்கு பயம் இல்லை.சற்று அந்த இடம் அமைதியாக இருந்தது திடீரென்று இடியுடன் கூடிய ஒரு சிரிப்பு சத்தம் உயரமான உருவம் பாதி எரிந்தநிலையில் சுவதனாவால் அந்த முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை ஏனென்றால் முகம் பாதி எரிந்தநிலையில் இருந்தது...

சுவதனாவிற்கு இதே சிரிப்பு சத்தம் எறிந்த முகம் ....எங்கோ படித்ததுபோல் இருந்தது.அவனது குரல் கர்ணகொடூரமாக இருந்தது சுவதனா என்று அழைத்தான் ......

முதலில் என் அம்மா அப்பா எங்க? என்று கேட்டாள் சுவதனா.

 கொஞ்சம் பொறுமையா இரு சுவதனா. நான் யாரு ? ஏன் உன்ன  follow பன்றேன்னு கேட்பன்னு பார்த்தேன்? நீ என்னடான்னா அம்மா அப்பாவை கேட்கற?

 என் அம்மா அப்பா எங்க என்று அலறியபடி அதட்டினாள் சுவதனா!

என்ன சுவதனா இவ்வளவு நேரம் உன் அம்மா அப்பா உன் கூடதான் இருந்தாங்க.

சுவதனா திடுக்கிட்டாள் பயத்துடன் அழுகை

 நீ drive பண்ணிட்டுவந்தியே van  அதிலிருந்த ice containerலதான் இருந்தாங்க.

 பயத்தில் சுவதனா கதறத்தொடங்கினாள்

ஓஜா மேலும் பேசினான்.

 ஆனால் இன்னமும் உங்க அம்மா அப்பா உயிரோட நல்லபடியா இருக்காங்க அவங்களுக்கு ஒன்னும் ஆகல நான் சொன்னபடி கேட்டால் உன் அம்மா அப்பா உனக்கு கிடைப்பாங்க.

 இல்லனா Iam sorryஎன்றான்  ஜெயதேவ் ஓஜா.

சுவதனா அழுதபடி அப்படியே மயங்கி விழுந்தாள் ........ தொடரும்.

No comments:

Post a Comment

  அபராஜிதா-part-6 அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக...